Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மகா சிவராத்திரி நாளில் நடக்கும் 3 கிரக பெயர்ச்சிகள்: இந்த 3 ராசிக்கு சிவனின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும்..!
Maha Shivratri 2026: சிவபெருமானுக்கு உரிய மிகவும் விஷேசமான நாள் தான் மகாசிவராத்திரி. என்ன தான் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் விஷேசம் நிறைந்த மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் மகா சிவராதிரி பிப்ரவரி 15 ஆம் தேதி வருகிறது. மேலும் இந்த மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் 3 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்திற்கும், மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் மகர ராசிக்கும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளனர். இப்படி 3 கிரகங்களும் ஒரே நாளில், அதுவும் மகா சிவராத்திரி நாளில் தங்களது நிலையை மாற்றுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

இப்படி 3 கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் சிவனின் ஆசியுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறவுள்ளனர். இப்போது மகா சிவராத்திரி நாளில் நடக்கும் 3 கிரகங்களின் பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
மகா சிவராத்திரி நாளில் நடக்கும் 3 கிரகப் பெயர்ச்சிகளால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மன அமைதி கிடைக்கும். நீண்ட காலமாக மனதில் இருந்த அழுத்தம் நீங்கி, மனம் ரிலாக்ஸாக இருக்கும். தொழிலில் இருந்த நிச்சயமற்ற தன்மைகள் நீங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிவனின் அருளால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பண பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலைமை மேம்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதாரணமாக இருக்கும். காதல் வாழ்க்கை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
கடகம்
மகா சிவராத்திரி நாளில் நடக்கும் 3 கிரக பெயர்ச்சிகளால் கடக ராசிக்காரர்கள் உறவுகள் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பெருகும் மற்றும் தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட வலுவாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
மகா சிவராத்திரி நாளில் நடக்கும் 3 கிரக பெயர்ச்சிகளால் துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பணிபுரிபவர்கள் சிவனின் அருளால் கடின உழைப்புக்கான முழு பலனையும் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுப் பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வாழ்க்கையில் இருந்த இருள் நீங்கி, சிவனின் ஆசியால் வாழ்க்கை பிரகாசிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


