Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
50 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் உருவாகும் சதுர்கிரக யோகம்.. அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரங்க இவங்கதான்!
Maha Shivratri 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து, சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இப்படி உருவாகும் யோகங்களில் சுப யோகங்கள் சுப தினங்களில் நிகழ்வது என்பது இன்னும் சிறப்பானது.
அந்த வகையில் வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வருகிறது. இந்நாளில் கிரகங்களின் தலைவனான சூரியன், சந்திரன், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் கும்ப ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. இந்த 4 கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் சிறப்பான சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருந்தாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த யோகத்தால் பிரகாசிக்கப் போகிறது. முக்கியமாக நிதி நிலையில் நல்ல உயர்வும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் புதிதாக திருமணம் செய்த இந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், சிவனின் அருளால் நல்ல வேலை தேடி வரும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெறலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் சிவனின் அருளால் நிறைவேறும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் எதிரிகளை தோற்கடிப்பார்கள். நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், இக்காலத்தில் அது முடிவுக்கு வந்து, தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஊடக துறையில் இருப்பவர்கள் நிறைய நற்பலன்களைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். பணியிடத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். போட்டி தேர்வுகளில் பங்கு கொள்ளும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications