Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
500 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் உருவாகும் சமசப்தக் யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Lunar Eclipse 2025 Samsaptak Yog On Chandra Grahan: 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் 07 ஆம் தேதி நிகழவுள்ளது. அதுவும் இந்த சந்திர கிரகணமானது சனி பகவானின் கும்ப ராசியில் நிகழவுள்ளது. அதே வேளையில் இந்நாளில் தான் செவ்வாய் மற்றும் சனி பகவானால் சக்திவாய்ந்த சமசப்தக் யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. அதோடு வருமானத்தில் நல்ல உயர்வும், புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகமும் கிடைக்கும். மேலும் நீண்ட காலமாக சிக்கியிருந்த பணமும் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக இந்த யோகமானது சந்திர கிரகணத்தன்று 500 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய் மற்றும் சனியால் கும்ப ராசியில் நிகழவிருப்பது தான் சிறப்பானது. இப்போது சந்திர கிரகண நாளில் உருவாகும் சமசப்தக் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. கலை, எழுத்து, இசை போன்றவற்றில் உள்ளவர்களின் திறமை பிரகாசிக்கும். வெற்றிகளை குவிப்பீர்கள். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சமசப்தக் யோகத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளவர்களை வென்று வீழ்த்துவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சம்சப்தக் யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications