Latest Updates
-
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
50 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Lakshmi Narayan And Navpancham Rajyog Make On August 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்களின் ராசி மாற்றங்கள் மட்டுமின்றி, கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட யோகங்கள் அவ்வப்போது உருவாகி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் கடக ராசியின் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.

அதே வேளையில் செவ்வாய் மற்றும் சனியின் நிலையால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்படி இவ்விரு ராஜயோகங்களும் ஒரே வேளையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது ஆகஸ்ட் மாதத்தில் ஒரே வேளையில் நிகழும் லட்சுமி நாராயண ராஜயோகம் மற்றும் நவபஞ்சம ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஒரே வேளையில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் மற்றும் நவபஞ்சம ராஜயோகங்களால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலை கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஒரே வேளையில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் மற்றும் நவபஞ்சம ராஜயோகங்களால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மறைமுக எதிரிகளை எதிர்கொண்டு சிறப்பாக வெல்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் மற்றும் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஒரே வேளையில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் மற்றும் நவபஞ்சம ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். பேச்சுத்திறன் மேம்படும். எதிர்பாராத வகையில் நிதி நன்மைகளைப் பெறக்கூடும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலைகளில் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
