Latest Updates
-
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா? -
வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்.. -
பன்னீர் வாங்குனா இந்த மாதிரி தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!
Krishna Jayanthi 2026: இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி நாளானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் பல முக்கியமான கிரகங்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும். அதில் தேவர்களின் குருவான குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியிலும், மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசியில் இருப்பர்.

இது தவிர தேவர்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியிலும், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியிலும் இருப்பர். இப்படியான கிரகங்களின் நிலைகள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் அமைந்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கூறப்படுகிறது.
இந்த கிரக நிலைகளின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக அமைப்பால் தொழிலில் முன்னேற்றத்தையும், வருமானத்தில் உயர்வையும், வியாபாரத்தில் நல்ல லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளில் உள்ள கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
கிருஷ்ண ஜெயந்தி நாளானது ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
கடகம்
கிருஷ்ண ஜெயந்தி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதுவும் கிரகங்களின் நிலைகளால் வேலை மற்றும் தொழிலில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை வலுவடைவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும்.
கன்னி
கிருஷ்ண ஜெயந்தியானது கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். அதுவும் குருவின் அருளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, தொழிலதிபர்களுக்கு நிறைய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் சிறப்பாக முடிவடைந்து மன திருப்தியைத் தரும்.
தனுசு
கிருஷ்ண ஜெயந்தியானது தனுசு ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். அதுவும் தொழிலதிபர்கள் தங்களின் புதிய திட்டங்களால் நல்ல பலனைப் பெறுவார்கள். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


