Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தி நாளில் உருவாகும் அபூர்வ யோகங்கள்.. அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Krishna Jayanthi 2024: ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதி நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார். இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 26 ஆம் தேதி வருகிறது. இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில் இந்நாளில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் உருவான அபூர்வ யோகம் உருவாகிறது. அதாவது இந்நாளில் சூரியன் ரோகிணி நட்சத்திரம் மற்றும் சிம்ம ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியில் குருவுடன் இணைவதால் கஜகேசரி ராஜயோகமும் உருவாகிறது.

அதோடு சிம்ம ராசியில் சூரியன் சுக்கிரனால் சுக்ராதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது. இப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இப்படியான ராஜயோகங்கள் உருவாகியிருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோக காலத்தில் கிருஷ்ணரை வழிபட்டால் பலமடங்கு நன்மைகள் கிடைக்கும்.
ஜோதிடத்தின் படி, கிருஷ்ண ஜெயந்தி நாளில் உருவாகவுள்ள இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக கிருஷ்ணரின் சிறப்பான அருள் கிடைக்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் ஆசியை பெறுவார்கள். இந்த கஜகேசரி ராஜயோகம் 2 ஆவது வீட்டில் உருவாகியிருப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். மேலும் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் மற்றும் நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படும்.
குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தந்தையின் உதவியால் இலக்கை அடைவீர்கள். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதி நிலை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தியானது சிறப்பாக இருக்கும். சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் புத்திசாலித்தனத்தால் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட வேலையை நன்கு வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பேச்சில் இனிமை அதிகரிக்கும். கிருஷ்ணரின் அருளால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது நற்பலனைத் தரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கிருஷ்ணரின் அருளால் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் கிருஷ்ணரின் அருளால் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். சில சவால்களை எதிர்கொண்டாலும், அவற்றை எளிதில் சமாளிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











