Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய கேது-சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
Ketu Venus Conjunction 2025 In Leo After 18 Years: வேத ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாக ராகு மற்றும் கேது கருதப்படுகின்றன. இதில் ராகு தற்போது கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பயணித்து வருகின்றனர். இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்கள். இதனால் சனி பெயர்ச்சிக்கு அடுத்தப்படியாக, ராகு கேது பெயர்ச்சியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக தெரியும்.
மேலும் கிரகங்களில் இவ்விரு கிரகங்களுக்கும் சொந்த ராசிகள் ஏதும் இல்லை. இந்நிலையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருவதால், சிம்ம ராசியில் கேது-சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இவ்விரு கிரகங்களும் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை அதிர்ஷ்டமானதாக, நிதி நிலையில் நல்ல உயர்வைத் தரக்கூடியதாக, தொழிலில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கப் போகிறது. இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் நிகழும் அரிய கேது-சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. மேலும் இக்காலத்தில் தொழில் ரீதியாக நல்ல வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. அதோடு நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. வங்கி இருப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதோடு சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இது தொழில் வீடு என்பதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படப் போகிறது. தொழிலதிபர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீண்ட காலமாக திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கப் போகிறது. மேலும் நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தந்தையுடனான உறவு வலுவடையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலதிபர்களின் நிதி நிலைமை வலுவடையும். இக்காலத்தில் செய்யும் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
