18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்!

Ketu Transit In Cancer 2026: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது ஆன்மீகம், ஞானம், பற்றின்மை ஆகியவற்றின் காரணியாவார். நவகிரகங்களில் கேதுவிற்கு என்று சொந்த ராசி எதுவும் இல்லை மற்றும் இந்த கேது எப்போதும் பின்னோக்கி வக்ரகதியில் தான் பயணிப்பார். இப்படிப்பட்ட கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்.

Ketu Transit In Cancer 2026 These 3 Zodiac Signs Luck Will Shine

தற்போது கேது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் கேது ராசியை மாற்றவுள்ளார். இந்த பெயர்ச்சியின் போது கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையவுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் கேது கடக ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த கடக ராசியின் அதிபதி சந்திரன். கேது சந்திரனின் ராசிக்கு செல்வதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. அதுவும் அந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மேலும் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். இப்போது 2026 ஆம் ஆண்டின் இறுதியில் நடக்கும் கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதைக் காண்போம்.

கடகம்

2026 ஆம் ஆண்டின் கேது பெயர்ச்சியானது கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். மனதளவில் நல்ல நிம்மதி கிடைக்கும். பணபுரிபவர்கள் சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பணம் தொடர்பாக நன்கு சிந்தித்து எடுக்கும் முடிவுகள் நன்மை பயக்கும். குடும்பத்தினருடனான உறவுகள் வலுவடையும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மொத்தத்தில் கேதுவின் அருளால் வாழ்வில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.

சிம்மம்

2026 ஆம் ஆண்டின் கேது பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு சில விஷயங்களில் நிம்மதியைத் தரும். அதுவும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதால், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட காலமாக வேலையில் ஏதாவது பிரச்சனையை சந்தித்து வந்தால், இப்பெயர்ச்சியால் அது முடிவுக்கு வரும். நிதி நிலையை வலுப்படுத்துவதற்கான புதிய வழிகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

தனுசு

கேது பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முக்கியமாக எந்த வேலையை கையில் எடுத்தாலும், அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை, தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இப்பெயர்ச்சிக்குப் பின் கட்டாயம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 15, 2026, 17:30 [IST]
Desktop Bottom Promotion