Latest Updates
-
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க..
கேரளா ஸ்டைல் தக்காளி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும்
Kerala Tomato Kurma Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று இட்லி, தோசைக்கு சட்னியை செய்யாமல், வீட்டில் தக்காளி அதிகம் இருந்தால், இந்த கேரளா ஸ்டைல் தக்காளி குருமாவை செய்யுங்கள். சட்னி செய்வதற்குப் பதில் கேரளா ஸ்டைல் தக்காளி குருமாவை செய்தால், 2 இட்லி சாப்பிடுபவர்கள் 2 இட்லி எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

முக்கியமாக இந்த கேரளா ஸ்டைல் தக்காளி குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குருமாவை ட்ரை செய்யலாம். குறிப்பாக இந்த குருமா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். நீங்களும் வழக்கமான தக்காளி குருமாவுக்குப் பதில் புதிதாக ஏதாவது முயற்சி செய்ய விரும்பினால் இதை செய்யுங்கள்.
உங்களுக்கு கேரளா ஸ்டைல் தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ கேரளா ஸ்டைல் தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2
- பழுத்த தக்காளி - 4
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- தேங்காய் பால் - 1 கப்
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
செய்முறை:
- வெங்காயம் மற்றும் தக்காளியை நனறாக க் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- தேங்காயை துருவி ப்ரெஷான மற்றும் திக்கான தேங்காய்ப்பாலை தயாரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். கடுகு மற்றும் கறிவேப்பிலையைப் போட்டுத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
- பின் உப்பு மற்றும் மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய்த்தூளைச் சேர்த்து, நன்கு வதக்கவும்.
- தக்காளி நன்கு குழையும் வரை வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும் இறுதியாக, தேங்காய் பாலைச் சேர்க்கவும். சில நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும்.
- குருமா வாசனை வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து அலங்கரிக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கேரளா ஸ்டைல் தக்காளி குருமா ரெடி. இது சாதம், தோசை மற்றும் ஆப்பம் என அனைத்திற்கும் சூப்பராக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
