Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
குரு சுக்கிரனால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் நிதி நிலையில் உயர்வு ஏற்படப்போகுது..
Jupiter Venus Make Navpancham Rajyog 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
இப்படி இந்த ராசியில் குரு பகவான் இருக்கும் காலத்தில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பல்வேறு யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த வகையில் பிப்ரவரி 23 ஆம் தேதி குரு பகவான், அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனுடன் சேர்ந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.

இந்த யோகத்தின் போது குருவும், சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருப்பார்கள். இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் வணிகம் மற்றும் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறவுள்ளனர். மேலும் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களையும் காணவுள்ளனர். இப்போது நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
குரு சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி நிலைமை மேம்படும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக கடினமாக உழைத்து வந்தவர்களுக்கு, அதற்கான பலன் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும்.
கடகம்
குரு சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். குருவின் அருளால் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். இதன் மூலம் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். புரிதல், பொறுமையுடன் எந்த வேலையை அணுகினாலும், வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
கும்பம்
குரு சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையில் நல்ல வெற்றியுடன் லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
