27 மாதங்களுக்கு பின் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிக்காரங்க காட்டுல பண மழை கொட்டப்போகுது...

Jupiter Transit In Thiruvaathirai Nakshatra 2025: ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றும். அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அந்த வகையில் நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். இதுவரை குரு பகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பயணித்து வந்தார்.

Jupiter Transit In Thiruvaathirai Nakshatra 2025 These Zodiac Signs Luck Will Shine

இந்நிலையில் ஜூன் 14ஆம் தேதி, அதாவது இன்று திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு. இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் அடுத்த இரண்டு மாத காலம் இருப்பார். அதாவது ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இருந்து, பின் புனர்பூசம் நட்சத்திரத்திற்கு செல்வார். மேலும் குரு பகவான் இக்காலத்தில் மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் இருப்பார்.

ஜூலையில் மீண்டும் உதயமாகி பயணிப்பார். குரு பகவானின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் திருவாதிரை நட்சத்திரம் செல்லும் ராகுவால் பெரிய அளவில் நிதி நன்மைகளைப் பெறவுள்ளனர். இப்போது குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளை பெறுவார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்கள் பயணிகளாகவோ அல்லது ப்ரீலான்சர்களாகவோ இருந்தால், நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். குருவின் பார்வை அதிர்ஷ்ட வீட்டிலும், குருவின் 9 ஆவது பார்வை ராகுவின் மீதும் இருக்கும். இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குருவின் 9 ஆவது பார்வை வருமான வீட்டில் விழுவதால், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களால் நிறைய நிதி நன்மைகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறக்கூடும். குருவின் 9 ஆவது பார்வை ராகுவின் மீதும், ராகுவின் 5 ஆவது பார்வை குருவின் மீது விழுவதால், குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகளை தீரும். புதிய வேலையை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுகூர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சுப செலவுகளை சற்று சந்திக்க நேரிடும். குரு பகவானின் ஆசியால் உங்களின் மரியாதை அதிகரிக்கும். பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். குரு பகவானின் ஆசியால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளால் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முக்கியமாக வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, June 14, 2025, 17:08 [IST]
Desktop Bottom Promotion