Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்!
குருபெயர்ச்சியால் டிசம்பர் 05 வரை இந்த 3 ராசிக்காரர்களை கெட்ட நேரம் துரத்தப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் இந்த மாற்றங்கள் பொதுவாக அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றத்தை அளிக்கும், சில ராசிக்காரர்களுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அக்டோபர் 18 ஆம் தேதி இரவு 9:39 மணிக்கு வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் கிரகமான குருபகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார், இது சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த கிரக மாற்றம் சில ராசிகளில் பிறந்தவர்களின் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கலாம். டிசம்பர் 5 ஆம் தேதி அவர்கள் இந்த மோசமான பலன்களை அனுபவிக்கலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
டிசம்பர் 5 வரை, குருவின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படப்போகிறது, வாழ்க்கை மிகவும் சவாலானதாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்களின் ஆதரவுகளை இழந்து சவால்களைச் சந்திக்க நேரிடும், இந்த காலகட்டம் உங்களுக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டலாம். அலுவலகத்தில் உங்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படலாம், இது உங்களின் மன அமைதியைக் கெடுக்கும். வியாபரத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த லாபம் வராமல் இருப்பதுடன் நஷ்டமும் அதிகரிக்கலாம்.
உங்களின் செலவுகள் எதிர்பாராமல் அதிகரிப்பதால் உங்களின் சேமிப்பு கரையத் தொடங்கும். தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். செலவுகளுக்கும், வருமானத்திற்கும் இடையில் சமநிலையைப் பராமரிக்க நீங்கள் கடினமாக போராட வேண்டியிருக்கலாம். இந்த அழுத்தங்கள் உங்கள் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கும்.
மகரம்
குருபகவான் கடக ராசியில் பலவீனமாக இருப்பதால், அது மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்களின் தொழில் வாழ்க்கையில் கடுமையான பிரச்சினைகள் ஏற்படலாம், அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய பயமும், கவலையும் அதிகரிக்கலாம். அவர்களின் வேலையைப் பொறுத்தவரை, குருபகவான் கடக ராசியில் சஞ்சரிப்பதால் அவர்களின் முயற்சி அங்கீகரிக்கப்படாமல் போகலாம், இதனால் அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
வியாபாரத்தைப் பொறுத்தவரை, அவர்கள் வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மிதமான அளவு பணம் சம்பாதிக்கலாம். அவர்களின் நிதிநிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் போகலாம். நிதிரீதியாக, அவர்கள் லாபம் மற்றும் செலவுகள் இரண்டையும் சமாளிக்க திணறலாம். மொத்தத்தில் இது அவர்களுக்கு மிகவும் சோதனையான காலமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த குருபெயர்ச்சியால் பல போராட்டங்களை அனுபவிக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்களின் வார்த்தைகள் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். இதன் காரணமாக, இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முடிந்தவரை உங்கள் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களின் ரகசியங்கள் உங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம்.
வேலையில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடமிருந்து சில எதிர்மறையான கருத்துக்களை நீங்கள் கேட்க வேண்டியிருக்கும். நிதி நெருக்கடி மோசமடைவதைத் தடுக்க தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் துணையிடம் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
