Latest Updates
-
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம்
12 ஆண்டுகளுக்கு பின் மிதுன ராசியில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Jupiter Set In Gemini On 12 June 2025: வேத ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த கிரகங்களுள் ஒன்றாகும். தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், பொதுவாக ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார். ஆனால் 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் இரு மடங்கு வேகத்தில் நகர்கிறார். அதாவது, இந்த ஆண்டில் குரு பகவான் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார்.
ஏற்கனவே குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் சென்றுள்ளார். இந்த மிதுன ராசியில் அக்டோபர் வரை இருப்பார். இந்நிலையில் குரு பகவான் ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். இந்த அஸ்தமன நிலையில் குரு பகவான் ஜூலை 09 ஆம் தேதி வரை இருந்து, பின் உதயமாவார்.

குரு பகவான் சுமார் 27 நாட்கள் அஸ்தமன நிலையில் இருந்தாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதுவும் குரு அஸ்தமன நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. ஏனென்றால் குரு ஒருசில வீடுகளில் இருக்கும் போது அதிகபட்ச நன்மைகளை வழங்குவார். அந்த வகையில் குரு அஸ்தமனமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் குரு பகவானின் அருளால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக அரசு வேலைகளில் இருந்த தடைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கலாம். நம்பிக்கையுடன் எதை செய்தாலும், அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். முக்கியமாக நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவார்கள். கல்வி துறையில் இருப்பவர்கள் மற்றும் மாணவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் புத்திசாலித்தனமாக பணத்தை முதலீடு செய்தால் நிச்சயம் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். சரியான இடத்தில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இருப்பினும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். பந்தயத்தில் பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால், சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நன்மைகளைப் பெறுவார்கள். இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும். ஒவ்வொரு வேலையையும் நேர்மறையாக சிந்தித்து செய்தால், வெற்றி பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் வெற்றிகள் குவியும். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் சாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


