Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
12 ஆண்டுகள் கழித்து வக்ரமாகும் குரு: நவம்பர் 11 முதல் மார்ச் வரை இந்த 3 ராசிக்கு வாழ்க்கை செழிப்பா இருக்கும்..
Jupiter Retrograde On 11 November 2025: ஜோதிடத்தில தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். ஆனால் இந்த ஆண்டு குரு பகவான் இரண்டு முறை ராசியை மாற்றியுள்ளார். அதில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசியில் நுழைந்து பயணித்து வந்த குரு பகவான், அக்டோபர் 18 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார்.
இந்த கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடகம் குருவின் உச்ச ராசியாகும். இந்த ராசிக்குள் குரு பகவான் நுழைந்ததால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இந்நிலையில் குரு பகவான் இந்த கடக ராசியில் நவம்பர் 11 ஆம் தேதி வக்ரமாகி பயணிக்கவுள்ளார்.

குரு வக்ரமாக இருப்பதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கை தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். ஜோதிடத்தின் படி, குரு பகவான் தற்போது அதிசார நிலையில் பயணித்து வருகிறார். அதாவது ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவதற்கு பதிலாக, அடுத்த 7 ஆண்டுகளில் 12 ராசிகளிலும் நுழைந்து பயணித்து வருவார்.
அதுவும் தற்போது கடக ராசியில் பயணித்து வரும் குரு பகவான், நவம்பர் 11 ஆம் தேதி கடகத்தில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கி, டிசம்பர் 05 ஆம் தேதி வரை கடகத்தில் வக்ரமாக இருப்பார். அதன் பின் மிதுன ராசியில் மார்ச் 11 ஆம் தேதி வரை வக்ரமாக இருப்பார். இப்போது குரு வக்ரமாக இருப்பதால், எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குருவின் பார்வை 1, 11 மற்றும் 3 ஆவது வீடுகளில் விழுவதால், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தடைபட்டு வந்த வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். தாயாருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நல்ல நன்மைகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு குரு பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குருவின் செல்வாக்கினால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். யாத்திரைகளை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குருவின் பார்வை 7 ஆவது வீட்டில் விழுவதால் திருமண வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமானாவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications