Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
குரு-சந்திர சேர்க்கை.. இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Jupiter Moon Conjunction On 14 September 2025: ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடிய கிரகம் தான் சந்திரன். இந்த சந்திரன் மனதில் காரணியாவார். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். குறுகிய நாட்களில் சந்திரன் ராசியை மாற்றுவதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.
அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அந்த வகையில் சந்திரன் செப்டம்பர் 14 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் ஏற்கனவே தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் 12 ஆண்டுகள் கழித்து நுழைந்து பயணித்து வருகிறார். இதனால் மிதுன ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மிகவும் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.

இந்த ராஜயோகம் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். சுமார் 54 மணிநேரம் நீடித்திருக்கும் இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளனர். மேலும் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
மாணவர்களின் உயர் கல்வி படிக்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். சிலருக்கு வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல துணை அமையலாம். இக்காலத்தில் பணியிடத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். மொத்தத்தில் குருவின் ஆசியால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இது தவிர குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் இக்காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனை பாராட்டுவார்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல நன்மைகளைத் தரும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பார்கள். இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படும்.
தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள். அச்சமின்றி எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். இக்காலத்தில் உங்களின் மன உறுதி, பொறுமை மற்றும் தொலைநோக்கு பார்வை போன்றவற்றால் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
