Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
12 ஆண்டுகளுக்கு பின் குருவால் உருவாகும் அர்த்தகேந்திர யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Jupiter Mercury Make Ardhakendra Yog 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கிரகங்களின் ராசி மாற்றங்களின் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி, அவையும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் இருக்கும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து யோகங்களை உருவாக்குவார்கள். அதே சமயம் புதன் சிம்ம ராசியில் உள்ளார். அந்த வகையில் குரு பகவான் செப்டம்பர் 04 ஆம் தேதி புதனுடன் சேர்ந்து அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளார்.

இந்த யோகத்தின் போது குருவும், புதனும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் இருப்பார்கள். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, முன்னேற்றத்தை, வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கப் போகிறது. இப்போது அர்த்தகேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
அர்த்தகேந்திர யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். குரு பகவானின் அருளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
அர்த்தகேந்திர யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். இதன் காரணமாக எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். ரிஸ்க்குகளை எடுக்க தயங்கமாட்டீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் பின்வாங்கமாட்டீர்கள். தன்னம்பிக்கையால் போட்டிகள் மற்றும் சவால்களில் வெற்றி பெற்று காண்பிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.
தனுசு
அர்த்தகேந்திர யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், எதிர்பாராத உயரத்தை அடைவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முன்னேற்ற பாதைகள் திறக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
