Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
குரு-புதனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்...
Shadashtak Yog Before Diwali 2024: ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் திருமணம், குழந்தைகள், அறிவு, செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் புத்திகாரகனாக புதன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவ்விரு கிரகங்களின் நிலைகளால் ஒரு யோகம் உருவாகியுள்ளது. அது தான் ஷடாஷ்டக யோகம். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

அதுவும் இந்த ஷடாஷ்டக யோகமானது தீபாவளிக்கு முன் வருவதால், 3 ராசிக்கார்கள் பெரிய நிதி இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் குரு உருவாக்கிய ஷடாஷ்டக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
ஷடாஷ்டக யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் அதிக கோபத்தையும் எரிச்சலுணர்வையும் சந்திப்பார்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது பெரிய இழப்பை உண்டாக்கிவிடும். முக்கியமாக பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திப்பீர்கள்.
பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது. முக்கியமான வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வீட்டு சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
ஷடாஷ்டக யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் மன அமைதி இல்லாமல் அவதிப்படக்கூடும். கோபத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். வியாபாரிகள் பல தடைகளை சந்திப்பார்கள். கோபம் அதிகமாக வரும் மற்றும் அந்த கோபத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும்.
நிதி இழப்பு ஏற்படலாம். இதன் விளைவாக நிறைய கடனை வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும், நன்கு யோசித்து பின் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு படிப்பில் கவனம் குறையும். வீட்டின் சூழ்ல் பதட்டம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
மீனம்
ஷடாஷ்டக யோகத்தால் மீன ராசிக்காரர்களின் நிதி நிலை பலவீனமாக இருக்கும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். இதன் விளைவாக பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது. யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் கடினமாக இருக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். தொழிலில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
