Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பொங்கல் நாளில் உருவாகும் அர்த்தகேந்திர யோகம்: இந்த 3 ராசிகளின் தூங்கி கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கபோகுது
Jupiter Mars Make Ardhakendra Yog On Pongal 2025: வேத ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்களில் குரு மற்றும் செவ்வாய் மிகவும் முக்கியமான கிரகங்களாகும். அதில் குரு பகவான் தேவர்களின் குரு ஆவார் மற்றும் இவர் செல்வம், குழந்தைகள், திருமணம், அறிவு, பொறுமை, புத்திசாலி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
அதேப் போல் செவ்வாய் கிரகங்களின் தளபதியாவார் மற்றும் இவர் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். எனவே இந்த இரண்டு கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகை நாளில், அதாவது ஜனவரி 14 ஆம் தேதி குருபகவானும், செவ்வாயும் அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது பொங்கல் நாளில் உருவாகும் அர்த்தகேந்திர யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
அர்த்தகேந்திர யோகத்தால் கன்னி ராசிக்கார்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறவுள்ளார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பேச்சுத்திறன் மேம்படும. தொழில் ரீதியாக, கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்
அர்த்தகேந்திர யோகத்தால் துலாம் ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும் மற்றும் இந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணியிடதில் சற்று வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். அதே சமயம் குருவின் அருளால் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
அர்த்தகேந்திர யோகத்தால் கும்ப ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் தேடி வரும். சிலருக்கு நல்ல சம்பளத்துடனான வேலை தேடி வரும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தாயின் ஆரோக்கியம் குறித்த கவலை சற்று அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications