Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
12 ஆண்டுகளுக்கு பின் குரு பெயர்ச்சியால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
Hans Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது வக்ரமாகியும், வக்ர நிவர்த்தி அடைந்தும், சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ஆண்டு குரு பகவான் வேகமாக நகர்ந்து வருகிறார். இதனால் இந்த மிதுன ராசியில் அக்டோபர் வரை இருந்து, பின் கடக ராசிக்கு பெயர்ச்சியாகவுள்ளார். ஒரே ஆண்டில் இரண்டு முறை குரு பகவான் ராசியை மாற்றவுள்ளார்.

அதுவும் அக்டோபர் மாதத்தில் குரு பகவான் கடக ராசிக்கு செல்லவுள்ளார். கடக ராசிக்கு குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பின் செல்லவுள்ளார். இதனால் இந்த குரு பெயர்ச்சியால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது பஞ்சமகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றாகும். இந்த ராஜயோகம் ஒருவரை புத்திசாலியாகவும், நிதி ரீதியாக வலுப்படுத்துவதோடு, வெற்றிகளையும் பெற வைக்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும்.
இந்த சக்தி வாய்ந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் கணிசமான நல்ல பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் பெரிய ஜாக்பாட் அடிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல பலனைப் பெறுவீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். மேலும் உங்கள் பிள்ளைகள் வேலைக்கு செல்லும் வயதில் இருந்தால், அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். ஆன்மீகத்திலும், தொண்டுகளிலும் ஆர்வம் அதிகரிக்கும். திருமணமானவர்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சொந்தமாக தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அது நிறைவேறும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் மற்றும் மரியாதையைப் பெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்களும், முடிவெடுக்கும் ஆற்றலும் மேம்படும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் உடன் வேலை செய்பவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் நல்ல பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கினால், நல்ல பலனைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
