Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
ஜூன் மாதத்தில் குருபகவானின் ஆசீர்வாதத்தால் இந்த 5 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்களாம்...!
கிரகங்களின் ஒவ்வொரு ராசி மாற்றமும், நட்சத்திரம் மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ஜூன் மாதத்தில் நடக்கப்போகும் கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதத்தில் குருபகவான் மிதுன ராசியில் அஸ்தமனமாகப் போகிறார்.
குருபகவான் ஜூன் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளிக்கப்போகிறார். இந்த மாதத்தில் அவர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் குருபகவானின் ஆசீர்வாதத்தைப் பெறப்போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
குருபகவானின் ஆசீர்வாதத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நற்பலன்கள் கிடைக்கலாம். அவர்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் நீண்ட கால ஆசை ஒன்று நிறைவேறும். வணிக மாற்றங்கள் அவர்களுக்கு நிதி ஆதாயங்களை ஏற்படுத்தும். வேலையில் சக ஊழியர்களும், மேலதிகாரிகளும் அவர்களுக்கு சாதகமாக உதவுவார்கள். ஜூன் மாதம் அவர்களின் வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் ஆசீர்வாதம் சிறப்பான பலன்களை அளிக்கும். வணிக மாற்றங்கள் அவர்கள் வாழ்க்கையில் நன்மைகளை இரட்டிப்பாக்கும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. வணிகத்தில் லாபங்கள் அதிகரிக்கும். இந்த மாதம் அவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் ஆச்சரியப்படத்தக்க லாபங்களைக் காண்பார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இரு மடங்காக அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குருவின் ஆசீர்வாதம் இருமடங்கு நன்மைகளை அளிக்கப்போகிறது . அவர்கள் வாழ்க்கையில் பல சாதனைகள் நிகழலாம். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்படுகிறது. நிதி ஆதாயங்கள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றன. இது வியாபாரத்தில் சிறப்பான காலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த காலத்தில் திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அதிகரிக்கும். காதலர்கள் இந்த காலகட்டத்தில் அவர்களின் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம்.
துலாம்
குருபகவானின் ஆசீர்வாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாற்றங்களை உறுதி செய்கிறது. இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை இரட்டிப்பாகும். மேலும், வியாபாரத்தில் கிடைக்கும் லாபமும் இரட்டிப்பாகும். இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எந்த விதமான நெருக்கடிகளும் இருக்காது என்பது மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெரிய வெற்றி காத்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் நீதிமன்ற வழக்குகள் அவர்களுக்கு சாதகமாகின்றன. குருவின் ஆசீர்வாதம் அவர்களின் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு, குருவின் ஆசீர்வாதமானது பல அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. இது பெரும்பாலும் வருமானம் மற்றும் நிதி ஆதாயங்களை அதிகரிக்க வழிவகுக்கிறது. குருவின் அஸ்தமனமானத்தால் அவர்கள் வாழ்க்கையில் செழிப்பும் செல்வமும் இரட்டிப்பாகும் . இவை அனைத்தும் அவர்களின் வாழக்கையில் இருமடங்கு இன்பத்தை கொடுக்கும். இந்த காலக்கட்டத்தில் அலுவலகத்தில் சூழல்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

