அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது!

Jupiter Ketu Conjunction In Leo On 31 October 2026: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இதனால் குரு பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம் ஒருவரது வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Jupiter Ketu Conjunction In Leo On 31 October 2026 These Zodiac Signs Luck Will Shine

தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைவுள்ளார். அப்போது அந்த ராசியில் ஏற்கனவே பயணித்து வரும் கேதுவுடன் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளார். இந்த கேது ஒரு நிழல் கிரகமாகும்.

எப்போதும் வக்ர நிலையில் பயணிக்கும் கேது திடீர் மாற்றங்கள் மற்றும் மர்மத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட கேதுவுடன், குரு பகவான் பல ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத பல புதிய வழிகளில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகளுடன் சம்பள உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் நிதி மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் மற்றும் முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு நீண்ட கால கடின உழைப்பின் பலனாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திடீர் நிதி ஆதாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இருந்தாலும், எந்தவொரு நிதி முடிவுகளையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு குறித்த நல்ல செய்திகள் தேடி வரலாம். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக இக்காலத்தில் சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது. ஆகவே இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். அதோடு தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். இதுவரை பண பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தவர்கள், இந்த குரு பெயர்ச்சிக்கு பின் பண மழையில் நனைவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, October 9, 2026, 9:31 [IST]
Desktop Bottom Promotion