Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
குரு சந்திரனால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: அக்டோபர் 20 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழியப்போகுது...
Jupiter And Moon Forms Gajkesari Rajyog In October 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் யோகங்களின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் சுப கிரகமான குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 20 ஆம் தே தி சந்திரன் ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ரிஷப ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமான யோகம்.

சந்திரன் இந்த ராசியில் 2 1/2 நாட்கள் இருப்பார். இதனால் இந்த யோகமும் 2 நாட்கள் வரை நீடித்திருக்கும். இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவும், முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கப் போகிறது. இப்போது ரிஷப ராசியில் உருவாகவுள்ள கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். செய்யும் வேலையில் வெற்றிகள் குவியும்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வைக் காணலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் பெருகும். நிதி ரீதியாக, பண வரவு சிறப்பாக இருக்கும். இதனால் பணம் தொடர்பான வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை செய்ய நினைத்தால் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு சிறப்பாக இருக்கும். தாயுடனான உறவு வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications