Latest Updates
-
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
June 2025 Horoscope: ஜூன் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகுதாம்...!
June 2025 Horoscope: ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஜூன் மாதமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் வரப்போகிறது. அந்த மாற்றங்கள் எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பது அவர்களின் ராசியில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
ஜூன் மாதத்தில் பல கிரககங்கள் தங்கள் நிலையை மாற்றப்போகின்றன. ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரனின் கிரக மாற்றம் நடக்கப்போகிறது. அதுமட்டுமின்றி ஜூன் மாதத்தில் மொத்தம் நான்கு கிரக மாற்றங்கள் நடக்கப் போகின்றன. சுக்கிரன், புதன், சூரியன் மற்றும் செவ்வாய் என நான்கு சக்திவாய்ந்த கிரகங்கள் மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நெருக்கடிகளை ஏற்படுத்தப்போகிறது.

ஜூன் மாதத்தில் சுக்கிரன் மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். மேலும் செவ்வாய் மற்றும் கேதுவும் இணையப் போகின்றனர். மேலும், குரு மற்றும் புதனின் சேர்க்கை சில ராசிகளில் மிகவும் மோசமான பலன்களை உருவாக்குகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
ஜூன் மாதத்தில் நடக்கும் கிரக சேர்க்கைகள் மேஷ ராசியினருக்கு மோசமான பலன்களை அளிக்கப் போகிறது. அவர்கள் வேலையில் தடைகளையும், சிரமங்களையும் சந்திக்க நேரிடும். மேலும், செவ்வாய் மேஷ ராசியின் ஐந்தாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். அது மட்டுமல்லாமல், சனி அவர்களின் ஏழாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். செலவுகளை அதிகரிக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகளும் ஏற்படலாம். பண விஷயத்தில் நெருக்கடிகளும் சிக்கல்களும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் தங்கள் தொழில் மற்றும் வேலையில் பல தடைகளை சந்திப்பார்கள். இந்த தடைகள் அவர்களுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தும். இந்த மாதம் அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும் நேரம் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் நிதி ,மேலாண்மையில் கூடுதல் கவனம் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகளும் இந்த காலகட்டத்தில் சில பின்னடைவுகளை அனுபவிப்பார்கள். அதிகரித்து வரும் பிரச்சினைகள் அவர்கள் வாழ்க்கையில் பல சவால்களை ஏற்படுத்தும்.
சிம்மம்
ஜூன் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சோதனைகள் நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது. இந்த முறை நீங்கள் திருமணத்தில் அதிக சவால்களை எதிர்கொள்கிறீர்கள். உங்கள் சொந்த உறவினர்கள் கூட உங்களை நிராகரிக்கும் காலம் இது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய எதிரிகள் உருவாகுவார்கள். இந்த மாதம் உங்களின் அதிகப்படியான கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் வேலையை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
மீனம்
ஜூன் மாதத்தில், சனிபகவான் மீன ராசியின் லக்னத்தில் இருக்கிறார். மேலும் சனிபகவான் எட்டாவது வீட்டிலும் இருக்கிறார். இது தோஷங்களின் கடுமையை அதிகரிக்கிறது.இந்த மாதத்தில் அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளும் அதிகரிக்கும். சோம்பேறித்தனமாக இருப்பது அவர்களின் பிரச்சினைகளை அதிகரிக்கும். நீங்கள் பண விஷயத்தில் கவனமாக இல்லாவிட்டால், அது அதிக சவால்களை உருவாக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் நீங்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

