Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
July 2025 Monthly Horoscope: ஜூலை மாதம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
July 2025 Monthly Horoscope Lucky Zodiac Signs: 2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிட ரீதியாக, இம்மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதுவும் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் கடக ராசிக்கு செல்வதோடு, புனர்பூசம் மற்றும் பூச நட்சத்திரத்தில் பயணிப்பார்.
அதோடு கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஜூலை 28 ஆம் தேதி வரை சிம்ம ராசியில் இருந்து, பின் கன்னி ராசிக்குள் நுழைவார். அதன் பின் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் ஜூலை மாதத்தில் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். பின் நீதிமான் சனி பகவான் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். முக்கியமாக குரு பகவான் மிதுன ராசியில் உதயமாகி பயணிக்கவுள்ளார்.

இப்படி முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த ஜூலை மாத கிரக நிலைகளால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஜூலை மாதத்தில் தங்களின் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அரசு வேலைக்கு முயற்சித்தால், நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பரம்பரை சொத்துக்களில் இருந்த தடைகள் நீங்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றத்துடன், லாபமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு துறையிலும் மரியாதையும் கௌரவமும் அதிகரிக்கும். உறவுகள் முன்பை விட சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையிடமிருந்து பரிசைப் பெற வாய்ப்புள்ளது. வணிகத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் நல்ல லாபத்தைத் தரும் மாதமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு மிதமான லாபம் கிடைக்கும். ஷேர் மார்கெட்டில் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவீர்கள். நிலம், வாகனம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிறைய பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும். முக்கியமாக இந்த மாதத்தில் துணிச்சல் அதிகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ன. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மேலும் பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பலவிதமான நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் ஜூலை மாதம் அற்புதமான மற்றும் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
