Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
குருபகவான் அஸ்தமனமாவதால் ஜூலை மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புயல் அடிக்கப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கிரகங்கள் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. நவகிரகங்களில் குருபகவான் மிகவும் முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும். ஜோதிடத்தில் குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு சுப யோகத்தையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
தற்போது, குரு மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் இருக்கிறார், பின்னர் ஜூலை 09, 2025 அன்று மீண்டும் மிதுன ராசியில் உதயமாகிறார். குருபகவானின் இந்த இயக்கம் சில ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. இந்த பதிவில் குருபகவான் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
ஜூலை மாதத்தில் நடக்கும் குருவின் அஸ்தமனத்தால், கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். இந்த காலகட்டத்தில் செய்யப்படும் முதலீடுகளால் அவர்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.
திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை விபத்துக்கள் அல்லது இழப்புகளை ஏற்படுத்தும். வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
சிம்மம்
குருபகவானின் அஸ்தமனத்தால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் நிலையை தக்க வைத்துக்கொள்ள கடினமாக உழைக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வீட்டில் கொந்தளிப்பான சூழல் நிலவலாம். பயணங்களுக்கு இந்த காலம் நல்லதாக கருதப்படவில்லை.
இழப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அவர்கள் புதிய முதலீடுகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்கு சில பொருட்களை வாங்குவதற்கு முன் இருமுறை யோசித்து தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் அஸ்தமனம் சாதகமான பலன்களை அளிக்கப் போவதில்லை. இழப்புகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக முதலீடு செய்வது நல்லதுமுடிவுகளை கவனமாக எடுக்க வேண்டியது நல்லது. அவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பது நல்லது, இல்லையெனில் அவர்கள் நற்பெயரை இழக்க நேரிடும். குடும்பத்திலும் பிரச்சனைகள் இருக்கலாம், எனவே குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது சரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
