Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
Indra Ekadashi 2024: இந்திரா ஏகாதசி எப்போது 2024? அன்று கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
சாஸ்திரங்களின் படி, இந்துக்கள் ஏகாதசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. அதிலும் இந்த புரட்டாசி மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு மிக்கது.. அதனால் அன்றைய தினம் கண்டிப்பாக விரதம் இருப்பது வழக்கம்..பொதுவாகவே ஒரு வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வருகின்றன... அனைத்து ஏகாதசிகளும் வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்டு அவற்றின் பெயர்களுக்கு ஏற்ப பலன்களையும் தந்துக் கொண்டிருக்கின்றன..
தற்போது, புரட்டாசி மாதம் நடந்து வருகிறது, இந்த மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில், விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்தும் உங்களுக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. வாங்க இந்த பதிவில் இந்தரா ஏகாதசி எப்போது? எப்படி வழிபடணும்? என்னென்ன தானம் வழங்கிட வேண்டும் என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம் ..

இந்திரா ஏகாதசி 2024 எப்போது ?
ஏகாதசி திதி செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை மதியம் 1:20 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 28 சனிக்கிழமை மதியம் 2:49 மணிக்கு முடிவடையும். சாஸ்திரங்களின்படி, உதய திதியில் எந்தத் தேதி வருகிறதோ, அதே நாளில் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் செப்டம்பர் 28ம் தேதி இந்திரா ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
வழிபடும் முறைகள்
இந்திரா ஏகாதசி நாளில், காலையில் நீராடி விட்டு, சுத்தமான ஆடைகளை அணிந்து, விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.. உங்கள் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கும் சேர்த்து அஞ்சலி செலுத்தலாம்... வழிபாட்டிற்கு முதலில் விஷ்ணுவின் சிலை அல்லது படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றவும்.
அந்த தீபத்தை நான்கு முக தீபமாக ஏற்ற வேண்டும்.. இந்திர ஏகாதசி நாளில் நான்கு முக தீபம் ஏற்றி விளக்கேற்றினால், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. விஷ்ணு பகவான் மஞ்சள் நிறத்தை மிகவும் விரும்புகிறார், எனவே அவருக்கு மஞ்சள் பூக்கள் மற்றும் இனிப்புகளை வைத்து வழிப்பட வேண்டும்..
நான்கு முக தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
நான்கு பக்க விளக்குகள் நான்கு திசைகளையும் குறிக்கிறது.. அதுமட்டுமல்லாமல் நான்கு திசையிலும் ஒளியைப் பரவச்செய்கிறது.. இந்த திசைகள் மகிழ்ச்சி மற்றும் செழுமையின் அடையாளமாக கருதப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த விளக்கை ஏற்றி வைப்பது வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது.
இந்த பொருட்களை கண்டிப்பாக தானம் செய்யுங்கள்
புரட்டாசி மாத இந்திர ஏகாதசி அன்று நெய், பால், தயிர் மற்றும் உணவு தானம் செய்வது வழக்கம். இந்த அன்னதானம்தான் தானங்களில் மிக பெரியது.. இந்த நாளில், ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது, இதன் காரணமாக முன்னோர்கள் திருப்தி அடைகிறார்கள். இவற்றை தானம் செய்வதால் மகிழ்ச்சியும் செழிப்பும் பெருகும், நிதி ஆதாய கிடைக்கும்.. உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications