Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்!
உங்களோட ராசி என்னனு சொல்லுங்க... உங்களுக்கு எத்தனை குழந்தை பிறக்கும்னு நாங்க சொல்றோம்... ஷாக் ஆகாதீங்க...!
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்களின் ஆளுமையையும் அவர்களின் எதிர்காலத்தையும் தெரிந்து கொள்ள உதவுகிறது என்பது நாம் அறிந்ததுதான். அதேசமயம் ராசியின் அடிப்படையில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம். தனிப்பட்ட வாழ்க்கை என்று வரும்போது அதில் அவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையும் அடங்கும்.
குழந்தைகள்தான் ஒருவரின் வாழ்க்கையை முழுமையடைய செய்பவர்களாக இருக்கிறார்கள். ஒருவரின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் அவர்களின் குழந்தைகள் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள். எனவே தங்கள் வாழ்க்கையில் எப்போது குழந்தைகள் பிறப்பார்கள், எத்தனை குழந்தைகள் பிறப்பார்கள் என்று தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள். இந்த பதிவில் உங்கள் ராசிப்படி உங்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் குழந்தைகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, மூன்று முதல் நான்கு குழந்தைகள் பெற அதிக வாய்ப்பு உள்ளது. மேஷ ராசிக்காரர்கள் 20களின் பிற்பகுதியில் குழந்தைகளைப் பெற முடிவு செய்யலாம், ஏனெனில் அவர்கள் நன்கு முதிர்ச்சியடைந்தவுடன் குழந்தைகளை பெற்றுக் கொள்வது நல்லது என்று கருதுகிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அமைதியான மற்றும் உறுதியானவராக அறியப்படுகிறார்கள். அவர்கள் இரண்டு குழந்தைகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர், ஏனெனில் இது அவர்களால் எளிதில் நிர்வகிக்கக்கூடிய எண். ரிஷபம் பொதுவாக பொறுமையாக இருப்பதால் 2 குழந்தைகளை வளர்ப்பதற்குத் தேவையான சகிப்புத்தன்மையுடனும் இருப்பதால், அவர்கள் சிறந்த பெற்றோராக இருக்கிறார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தனிமையில் இருப்பதை வெறுக்கிறார்கள், எனவே அவர்களுக்கு குழந்தைகள் வாழ்க்கையில் மிகவும் அவசியமானவர்கள். மிதுன ராசிக்காரர்கள் இரட்டை குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகளை எதிர்பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இயல்பிலேயே அன்பு மற்றும் அக்கறை உணர்வு கொண்டவர்கள், எனவே அவர்கள் ஒரு பெரிய குடும்பத்தை பெற விரும்புவது இயல்பானது. கடக ராசிக்காரர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது, ஆனால் இரண்டு குழந்தைகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி விடுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தை எப்போதும் பெரிதாக வைத்திருக்க விரும்புவார்கள், எனவே அவர்கள் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஜோதிடத்தின் படி அவர்கள் இரண்டு முதல் நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள திட்டமிடுகிறார்கள், அவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் உண்மையான மகிழ்ச்சியைப் பெறுவார்கள்.
கன்னி
அதிக குழந்தைகள் மனஅழுத்தத்தை ஏற்படுத்துவார்கள் என்று கன்னி ராசிக்காரர்கள் நினைக்கிறார்கள். எனவே அவர்கள் ஒரு குழந்தையே போதுமென்று நினைக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டு செய்வதால், தங்கள் குழந்தையை கண்ணனியமானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் வளர்ப்பார்கள்.
துலாம்
துலாம் ரசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து விஷயத்திலும் சமநிலையைக் கடைபிடிக்க விரும்புகிறார்கள். எனவே அவர்கள் தங்கள் வாழக்கையில் குழந்தை விஷயத்திலும் அதையே விரும்புகிறார்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகள் இருக்கலாம், அவர்களின் துணையைப் பொறுத்து நான்கு அல்லது ஆறு குழந்தைகளை கூட பெற்றுக்கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களை சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் அன்புக்குரியவர்களால் சூழப்பட்டிருப்பதை விரும்புகிறார்கள். இரட்டை இலக்கங்கள் இல்லையென்றாலும் குறைந்தபட்சம் 3 குழந்தைகளை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் இருக்கும் சுதந்திர மனப்பான்மைக் கொண்டவர்கள், இது அவர்களை மிகவும் கலகலப்பான மற்றும் வேடிக்கையான பெற்றோராக மாற்றுகிறது. அவர்கள் ஒரே ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டாலும் அவர்களை வளர்ப்பதற்கு தங்கள் வாழ்நாளை அர்பணிப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு மூன்று குழந்தைகளைக் கையாள்வது ஒரு பிரச்சனையல்ல. அவர்கள் பெற்றோராக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறார்கள். அவர்கள் குடும்பம், தொழில் மற்றும் குழந்தைகள் என அனைத்தையும் மிகவும் எளிதாக சமாளிப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சாகசத்தையும், சுதந்திரத்தையும் விரும்புகிறார்கள், எனவே அவர்கள் வாழ்க்கையில் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வார்கள். தங்களின் குழந்தையை தங்களைப் போலவே சாகசக்காரர்களாக வளர்க்க அவள் விரும்புவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இயல்பிலேயே இரக்கமும், பச்சாதாபமும் கொண்டவர்கள். எனவே அவர்கள் மூன்று அல்லது அதற்கும் மேற்ப்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதம் மற்ற பெற்றோர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
