Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
12 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படபோகுது!
Guru Peyarchi 2026: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதனால் இவர் ஒரு சுழற்சியை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனின் கடக ராசிக்கு செல்லவுள்ளார்.

இந்த கடக ராசியானது குரு உச்சமடையும் ராசியாகும். இந்த கடக ராசியில் குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி வரை இருப்பார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் மற்றும் நேர்மறையான மாற்றங்கள் ஏறபடலாம். முக்கியமாக 6 ராசிக்காரர்கள் இந்த குரு பெயர்ச்சியால் தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
அதுவும் தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்புகள், வருமான அதிகரிப்பு, நிதி நிலையில் உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இக்காலத்தில் லட்சுமி தேவியின் அருளும் கிடைப்பதால், வாழ்க்கை வெற்றியும், செழிப்பும் நிறைந்திருக்கும். இப்போது குரு பெயர்ச்சியால் தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். லட்சுமி தேவியின் அருளால், செல்வம், வருமானம் மற்றும் சொத்துக்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட வலுவான வாய்ப்புகள் உள்ளன. நிதி நிலை வலுவடையும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குரு பகவானின் அருளால் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எந்த துறையில் இருந்தாலும் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்கள் ஏற்படப்கூடும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த குரு பெயர்ச்சியானது புதிய தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளைக் கொண்டு வரக்கூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி கடினமாக உழைத்தால், உங்கள் தொழில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும்.
துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கப் போகிறது. இதன் விளைவாக புதிய வேலை வாய்ப்புக்களும், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவையும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வாக்கும், நற்பெயரும் அதிகரிக்கும். நிதி நிலைமை வலுபெறும். வேலை மற்றும் தொழில் ஆகிய இரண்டும் முன்பை விட வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் புதிய யோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.
மீனம்
மீன ராசி 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கடினமாக உழைத்தால் நல்ல பலன்களைப் பெறலாம். நிதி நிலைமை மேம்படும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் கவனக்குறைவாக வேலை செய்யாமல், முழு கவனத்துடன் எந்த வேலையையும் செய்தால், குரு பகவானின் அருளால் முன்னேற்றமும், வெற்றியும் நிச்சயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications





