Latest Updates
-
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்!
12 வருடம் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: ஜூன் 02 முதல் இந்த 4 ராசிக்கு கஷ்ட காலம் தொடங்குது.. உஷார்..
Guru Peyarchi 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் மிகவும் செல்வாக்குமிக்கவராக கருதப்படுகிறார். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி குருவின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் சுமார் 12 வருடம் கழித்து குரு பகவான் இந்த ராசிக்குள் நுழைகிறார். உச்ச ராசிக்கு குரு பகவான் செல்வதால், இப்பெயர்ச்சியின் போது குரு மிகவும் சக்திவாய்ந்ததாகவும் மங்களகரமானதாகவும் இருக்கும்.
இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். இப்போது 12 வருடம் கழித்து கடக ராசிக்கு செல்லும் குரு பகவானால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். வீட்டு பராமரிப்பிற்காக நிறைய செலவுகளை செய்வீர்கள். மேலும் மருத்துவ செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார்.இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணத்தை சேமிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். உங்களின் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் உங்களின் வார்த்தைகள் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆடம்பரமாக செலவழிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலையில் திடீர் மாற்றங்களை காண்பார்கள். பணியிட சூழல் மன அழுத்தமும், பதட்டமும் நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேண வேண்டும். செய்யும் வேலையில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். எதிரிகள் தொந்தரவுகளை செய்வார்கள். மறைமுக எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கிய விஷயத்தில் புறக்கணிப்தைத் தவிர்க் க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


