Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
பிள்ளையாரின் பரிபூர்ண ஆசி வேண்டுமா? அப்ப உங்க ராசிக்கேற்ற மந்திரத்தை 3 முறை சொல்லி கும்பிடுங்க..
Ganesh Chaturthi 2024 Mantras In Tamil: இந்து மதத்தில் பிள்ளையார் முழுமுதற் கடவுளாவார். விநாயகருக்கு பிள்ளையார், கணபதி, விக்னேஷ்வரன், கணேசா என்று பல பெயர்கள் உள்ளன. எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்னரும் பிள்ளையாரை வழிபட்டு தொடங்கினால், அவரது அருளால் அந்த காரியம் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
பிள்ளையார் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் இந்நாள் விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகரின் அருளைப் பெற நினைப்பவர்கள், விநாயகர் சதுர்த்தி நாளில் அவருக்கு பிடித்த கொழுக்கட்டையை செய்து படைத்து வழிபடுவதோடு, அவருக்கு உரிய மந்திரங்களையும் உச்சரித்தால், நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒவ்வொரு வகையான குணங்கள் இருக்கும். அந்த குணங்களைக் கொண்டு ஒவ்வொரு ராசிகளுக்குமான தெய்வங்களும், மந்திரங்களும் ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டிருப்பதால், 12 ராசிகளுக்குமான விநாயகரும், அவர்களுக்குரிய கணபதி மந்திரங்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே தைரியசாலிகள். இவர்களிடம் தன்னம்பிக்கையும், வீரமும் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வீர கணபதியை வழிபடுவது நல்லது. மேலும் இந்த ராசிக்காரர்கள் "கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம் பாலசூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம்.." என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் புதிதாக எதையாவது கற்று கொண்டிருக்க நினைப்பார்கள். வெற்றியைக் குவிக்க விரும்பும் ரிஷப ராசிக்காரர்கள் வித்யா கணபதியை வழிபடுவது நல்லது. இந்த ராசிக்காரர்கள் "நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம் சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாதிபம்.." என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் வியாபாரத்தில் கெட்டிக்காரர்கள். இவர்கள் லட்சுமி கணபதியை வழிபடுவது மிகவும் நல்லது. இந்த ராசிக்காரர்கள் "ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம் சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம் பயாபகம் சக்தி கணேசமீடே.." என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இந்த கடக ராசிக்காரர்கள் ஏரம்ப கணபதியை வழிபடுவது மிகவும் நல்லது. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் "பக்வசூத பலபுஷ்பமஞ்சரீ இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ! உத்வஹஞ் பரசுஹஸ்த தே நம: ஸ்ரீ சம்ருத்யுத தேவ பிங்கல.." என்னும் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் நல்ல ஆளுமை திறன் கொண்டவர்கள். வெற்றிகளைக் குவிக்க இந்த ராசிக்காரர்கள் விஜய கணபதியை வழிபட வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் "நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக:" என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் அமைதியானவர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் மோகன கணபதியை வழிபடுவது நல்லது. அதோடு இந்த ராசிக்காரர்கள் "தந்த கல்ப லதா பாசம் ரத்ந கும்ப அங்குசோஜ்வலம் பந்தூக கமநீயாபம், த்யாயேத் க்ஷிப்ர கணாதிபம்.." என்ற மந்திரத்தை சொல்லி வழிபடுவது நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் எவரையும் பார்த்ததும் கணித்துவிடும் திறன் கொண்டவர்கள். இவர்களைத் தேடி வெற்றி வரும். இந்த ராசிக்காரர்கள் வெற்றி கணபதியை வழிபடுவது நல்லது. மேலும் இந்த ராசிக்காரர்கள் "பாசாங்குச ஸ்வதம்தாம்ர பலவான் ஆகுவாகன: விக்நம் நிஹந் துந ஸர்வம் ரக்த வர்ணோ விநாயக:" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் தைரியமானவர்கள். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் நினைத்ததெல்லாம் நடக்கவும், வெற்றிகள் குவியவும் சக்தி கணபதியை வழிபடுவது நல்லது. மேலும் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் "சிந்தூரபலம் நிபானனம் த்ரிநயனம் ஹஸ்தேச பாசாங்குஸௌ: பிப்ராணாம் மதுமத் கபாலம் அதிசம் சாது சிந்து மௌலீம் பஜே:" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்களின் கஷ்டங்கள் தீர சங்கடஹர கணபதியை வழிபட வேண்டும். அதோடு இந்த ராசிக்காரர்கள் "சங்கேஷூ சாபருகமேஷூ மேஷகுடாரபாச சக்ரம் விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌரம்.." என்னும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆதிக்கம் கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்களை இறை வழிபாட்டில் மூலம் நீக்கலாம். இந்த ராசிக்காரர்கள் யோக கணபதியை வழிபட்டால், சகல யோகங்களையும் பெறலாம். மேலும் இந்த ராசிக்காரர்கள் "ஹரித்ராபம் சதுர்பாஹும் ஹரித்ரா வதனம் ப்ரபும் பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்த மேவ ச பக்தா மய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாசனம்.." என்னும் கணபதி மந்திரத்தை சொல்வது நல்லது.
கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களின் மனதை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். உங்கள் பேச்சு மற்றவர்களை மயக்கும் வகையில் இருக்கும். மற்றவர்களுடன் எளிதில் பழகும் நீங்கள், சித்தி விநாயகரை வணங்குவது நல்லது. அதோடு "லம்போதரம் ஸ்யாமநிபம் கணேசம் கடாக்ஷம் அட்ச ஸ்ரஜ ஊர்த்வகாப்யாம் ஸலட் டுகம் தந்த மரக்யாப்யாம் வாமேதராப்யஞ்ச ததானமீடே.." என்னும் மந்திரத்தை சொல்வது மிகவும் நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மற்றவர்களின் கஷ்டத்தை தன்னுடைய கஷ்டமான நினைப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பால விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த ராசிக்காரர்கள் "பாசாங்குச ஸ்வதந்தாம்ர பலவா நாஹ வாஹந: விக்னம் நிசந்துரு: சோன ஸ்ருஷ்டி தஷோ விநாயக!" என்னும் மந்திரத்தை கூறி கணபதியை வழிபடுவது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
