Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
12 ஆண்டுகளுக்கு பின் மிதுனத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: கும்பம் உட்பட 3 ராசிக்கு பண மழை கொட்டபோகுது..
Gajlaxmi Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் நிலைகளும், ராசி மாற்றங்களும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி மற்றும் இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அந்த வகையில் சுக்கிரன் ஜூலை 26 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால், குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதுவும் 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக அந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படுவதோடு, வருமானத்திலும் நல்ல உயர்வு ஏற்படலாம். இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் மிதுன ராசியில் குரு சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. மேலும் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து, சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படலாம். இசை, கலை அல்லது படைப்பு துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதுவரை குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து, படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் குரு சுக்கிர சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். முதலீடுகளை ஏற்கனவே செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும். காதலித்து வந்தால், அந்த காதல் திருமணம் வரை செல்வதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications