Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு லட்சுமி தேவியின் அருளால் பணம் குவியும்!
Gajkesari Rajyog On 18 August 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அதில் சந்திரன் மிகவும் வேகமாக ராசியை மாற்றக்கூடியவர். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 நாட்கள் வரை இருப்பார். இப்படி அடிக்கடி ராசியை மாற்றுவதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களையும் உருவாக்குவார்.
அந்த வகையில் மனத்தின் காரணியாக கருதப்படும் சந்திரன் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். இந்த மிதுன ராசியில் ஏற்கனவே தேவர்களின் குருவான குருபகவான் பயணித்து வருகிறார். இதனால் மிதுன ராசியில் சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்படி உருவாகும் யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்பேது மிதுன ராசியில் குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கையில் பல நேர்மறையான மற்றும் இனிமையான மாற்றங்களைக் காணக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இதனால் மிகப்பெரிய நன்மைகளையும் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிரிக்கும். மன அமைதி மேம்படும். திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இதுவரை சந்தித்து வந்த உடல்நல பிரச்சனைகள் தீரும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இதனால் மன அமைதி கிடைக்கும்.
நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமா முடிவடையும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப உறவுகள் வலுவடையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ஏற்கனவே பணிபுரிந்து வருபவர்கள் பதவி மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications