Latest Updates
-
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
கஜகேசரி ராஜயோகத்தால் இன்றுமுதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா
Gajkesari Rajyog On 10 April 2025: வேத ஜோதிடத்தில் சூரியனுக்கு தந்தையின் அந்தஸ்தும், சந்திரனுக்கு தாயின் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. கிரகங்களிலேயே சந்திரன் வேகமாக நகரக்கூடியவர். இந்த சந்திரன் ஒரு ராசியில் 2 1/2 நாட்கள் இருப்பார். இதனால் இந்த சந்திரன் மற்ற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது அம்சத்தினாலோ சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.
அந்த வகையில் ஏப்ரல் 10 ஆம் தேதி, அதாவது இன்று சந்திரன் கன்னி ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் ரிஷப ராசியில் குரு பகவான் பயணித்து வருகிறார். இதன் காரணமாக சந்திரன் மற்றும் குருவின் அம்சத்தினால் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதன் காரணமாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ஜோதிடத்தின் படி, சந்திரன் ஏப்ரல் 10 ஆம் தேதி கன்னி ராசியில் நுழைந்துள்ளார். இந்த ராசியில் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை இருப்பார். கன்னி ராசியில் சந்திரன் பயணிக்கும் வேளையில் ரிஷப ராசியில் உள்ள குருவின் பார்வை சந்திரன் மீது விழுந்து, சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இப்போது கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
கஜகேசரி ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். நல்ல பொருள் இன்பம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றியையும், முன்னேற்றத்தையும் பெறக்கூடும். தைரியம் இருமடங்கு அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் நல்ல பலனைத் தரும். அதுவும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும். தொழிலில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் சிலரிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நிறைய லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் பல புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். திட்டமிட்டவேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உறவுகள் வலுவடையும். வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும். உறவுகள் வலுவடையும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications