Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்...!
நவகிரகங்களில் வியாழன் என்று அழைக்கப்படும் குருபகவான் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. வியாழன் வருடத்திற்கு ஒரு முறை ராசிகளை மாற்றுகிறது. எனவே ஒரு ராசிக்கு மீண்டும் குருபகவான் வர 12 ஆண்டுகள் ஆகும். குரு தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். ஆனால் மே மாதத்தில், குரு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார். குரு அடுத்த மே மாதம் வரை மிதுன ராசியில் இருப்பார்.
குருபகவான் மிதுன ராசிக்குள் நுழைவது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு மாற்றமாகும். ஏனெனில் வியாழன் செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அதிபதியாக இருக்கிறார். ஜூலை மாதத்தில், மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இணைவார்கள். குருபகவானைப் போலவே, சுக்கிரனும் செழிப்பு, ஆறுதல் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கும் கிரகமாக விளங்குகிறார். இந்த இரண்டு சுப கிரகங்களும் ஒன்றாக வரும்போது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் கஜ லட்சுமி ராஜயோகம் உருவாகிறது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அவர்கள் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கஜலட்சுமி ராஜயோகம் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. ஏனெனில் இந்த ராஜயோகம் அவர்களின் லக்னத்தில் உருவாகிறது. எனவே, மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பல அதிர்ஷ்ட அனுபவங்கள் கிடைக்கும். சுக்கிரனின் செல்வாக்கின் காரணமாக, திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். அவர்களின் பொருளாதார நிலையம், சேமிப்பும் பெருகும். கஜ லட்சுமி ஒருவரின் நிதிநிலையை அதிகரிக்கும் மிகவும் சாதகமான ராஜயோகமாகும்.
இந்த ராஜயோகத்தால் அவர்கள் பணிசூழலில் அனுபவித்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலன்கள் அவர்களை தேடிவரும். மேலதிகாரிகள் அவர்களின் திறமையைக் கண்டறிந்து புதிய பொறுப்புகளைக் கொடுப்பார்கள். வியாபாரத்தில் இருப்பவர்கள் கஜலட்சுமி ராஜயோகத்தால் பெரும் லாபம் அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். மாணவர்கள் தங்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்படுவார்கள். உடல்நிலை சீராக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, கஜலட்சுமி ராஜயோகம் அவர்களின் பத்தாவது வீட்டில் உருவாகிறது. இது அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும் காலமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் அவர்களின் துறையில் பெரிய சாதனைகளை செய்ய முடியும். அவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள், அதன் மூலம் வெற்றியை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் நீண்ட கால இலக்குகளை அடைய முடியும். வியாபாரிகளுக்கு சில பெரிய ஆர்டர்கள் அவர்களைத் தேடி வரும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு அவர்களுக்கு பொருத்தமான துணை கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்கள் வரும். இது பொதுவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டங்களில் ஒன்றாக இருக்கும்.
கும்பம்
சுக்கிரன் மற்றும் குருவின் இணைப்பு கும்ப ராசியின் கிரக நிலையின் ஐந்தாவது வீட்டில் நிகழ்கிறது. இது அவர்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான பலன்களைத் தரப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் பல ஆசைகள் நிறைவேறப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது. கடந்த களங்களில் செய்த முதலீடுகளில் இருந்து பெரிய லாபம் கிடைக்கும்.
வேலையை மாற்ற விரும்புபவர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமானதாக இருக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க இது ஒரு சாதகமான நேரம். மாணவர்கள் தங்கள் கல்வியில் பெரிய வெற்றிகளை அடையலாம். உயர்கல்வி பயில்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் சேர்க்கை கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
