Latest Updates
-
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..
Dwidwadash Yog On 13 June 2026: ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மாற்றங்களும், அவற்றால் உருவாகும் யோகங்களும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் யோகங்கள் கிரகங்களின் சேர்க்கைகளால் மட்டுமின்றி, அவற்றின் நிலைகள் மற்றும் பார்வைகளாலும் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் இன்னும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

அந்த வகையில் ஜூன் 13 ஆம் தேதி மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் உச்ச ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். அதே வேளையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் உள்ளார். இதனால் இவ்விரு கிரகங்களின் நிலைகளால் அபூர்வமான துவித்வாதச யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மிகவும் மங்களகரமானது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழில், நிதி, குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது சந்திரன் மற்றும் புதனால் உருவாகும் துவித்வாதச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
துவித்வாதச யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். அதோடு அதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தகவல் தொடர்பு திறன் மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். செல்வம் குவியும். நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவடையும்.
சிம்மம்
துவித்வாதச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வருமானத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கம். நிதி நிலைமை வலுவடையும். புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மார்கெட்டிங், அரசியல் போன்ற துறைகளில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மீனம்
துவித்வாதச யோகத்தால் மீன ராசிக்காரர்கள் புதிய சாதனையை படைப்பார்கள். இக்காலத்தில் உங்களின் முழு திறமைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இது தொழிலில் நல்ல முன்னேற்றத்தை தரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளை ஈர்க்கலாம். சிலருக்கு அதன் மூலம் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களின் பிரச்சனைகள் தீரும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications



