Latest Updates
-
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம்
500 ஆண்டுகள் கழித்து தீபாவளியில் உருவாகும் வைபவ் லட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்..
Diwali 2025: இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த தீபாவளி நாளில் பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. முக்கியமாக இந்த தீபாவளி நாளில் சந்திரன் கன்னி ராசிக்கு செல்லவுள்ளார். இந்த கன்னி ராசியில் செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் உள்ளார். இதனால் கன்னி ராசியில் சந்திரன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது.
இந்த கிரக சேர்க்கையின் காரணமாக வைபவ் லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் தீபாவளி நாளில் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு வெளிநாடு செல்லும் கனவும் நனவாகும் வாய்ப்புள்ளது. இப்போது தீபாவளி நாளில் உருவாகும் வைபவ் லட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ் லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் தேடி வரும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உறவுகள் வலுவடையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல துணை அமையும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ் லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் சந்திர சுக்கிர சேர்க்கையால் வைபவ் லட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் வருமானம் மற்றும் முதலீடு வீட்டில் உருவாகிறது. ஆகவே இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படலாம். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் இருந்து எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
