Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
100 ஆண்டுகள் கழித்து தீபாவளியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Diwali 2025: வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாளில் பல ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இந்த ராஜயோகங்களால் மனித வாழ்க்கையில் சிறப்பான தாக்கங்கள் ஏற்படவுள்ளன.
அதுவும் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் துலாம் ராசியில் இருப்பார். இந்நிலையில் சந்திரன் துலாம் ராசிக்குள் நுழைந்து, செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

இருப்பினும் சில ராசிக்காரர்கள் மகாலட்சுமியின் அருளைப் பெற்று, செல்வத்தில் கணிசமான உயர்வைக் காணவுள்ளனர். மேலும் நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். அதோடு பல வழிகளில் இருந்தும் பணம் தேடி வரும். இப்போது தீபாவளியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல வசதிகளையும், ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குடும்பத்தினருடன் நல் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். பங்குச் சந்தையில் இருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொண்டால் நல்ல உயர்வை அடைவீர்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த துணையை சந்திப்பார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களின் முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
