Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
12 ஆண்டுகளுக்கு பின் தந்தேராஸில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க கோடி நன்மைகளைப் பெறப்போறாங்க..
Dhanteras 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். மேலும் இவர் தனுசு மற்றும் மீன ராசிகளிகளின் அதிபதியும் கூட. இந்த குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு பகவான் தீபாவளிக்கு முன் வரும் தந்தேராஸ் நாளில் ராசியை மாற்றவுள்ளார்.
இந்த ஆண்டின் தந்தேராஸ் அக்டோபர் 18 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசிக்கு சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் செல்லவுள்ளார். இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.

இதனால் வருமானத்தில் உயர்வு ஏற்படும் மற்றும் சமூகத்தில் மதிப்பும் மதியாதையும் அதிகரிக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறுவார்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது தந்தேராஸில் நடக்கும் குரு பெயர்ச்சியால் கோடி நன்மைகளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தந்தை மற்றும் ஆசிரியருடனான உறவு சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். உறவினர்களுடனான உறவு வலுவடையும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். மேலும் அரசு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருந்தால் நல்ல செய்திகளையும் பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
