Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. இந்த டிசம்பர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
December 2024 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2024 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2024 டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இம்மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிறப்பான செயல்திறனால் அலுவலகத்தில் உங்கள் வேலையில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். முதலீடுகளின் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாத இறுதியில் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பரில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் பேச்சைக் கட்டுப்படுத்தினால் நல்ல பலனைப் பெறலாம். காதல் வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும். இம்மாதத்தில் முடிவுகளை வேகமாக எடுப்பதன் மூலம் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் பணியிடத்தில் பலவிதமான அனுபவங்களை பெறுவார்கள். இம்மாதத்தில் அலுவலகத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். மாத இறுதியில் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தம்பதிகளிடையே பிணைப்பு வலுவாகும்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் சில முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இருப்பினும் சில முதலீடுகள் பிரச்சனைகளை உண்டாக்கலாம். காதல் விஷயங்களில் வருத்தப்படுவீர்கள். ஏனெனில் உங்களால் அதில் கவனம் செலுத்த முடியாது. பணியிடத்தில் சமநிலையை பேணுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். முக்கியமாக மாத இறுதியில் எடுக்கும் சில முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் கூட்டு தொழிலில் நல்ல பலனைப் பெறுவார்கள். ஆயினும் சில வதந்திகளால் பிரச்சனைகளை சந்திக்கலாம். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். புத்திசாலித்தனமாக முடிவெடுத்தால் நல்ல பலனைப் பெறலாம். நிறைய செலவுகள் இம்மாதத்தில் சந்திக்க நேரிடும். ஈகோ மோதல்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் முதலீடுகளால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் உங்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றியடையும். காதலில் இருக்கும் பிரச்சனைகளை பேசி தீர்வு காண்பது நல்லது.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தினரின் உதவியுடன் உங்களின் வேலைகளில் வெற்றி கிடைத்து செல்வம் அதிகரிக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மொத்தத்தில் வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கம். நிதி நிலை சற்று கடினமாக இருக்கும். பணியிடத்தில் நற்செய்திகளைப் பெறும் வேளையில், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் பொறுமையை கடைப்பிடித்தால் நற்பலனைப் பெறலாம்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் நன்கு சிந்தித்து முடிவுகளை எடுத்தால் நல்ல பலனைப் பெறுவீர்கள். இம்மாதத்தில் அதிக மன அழுத்தத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் மாத இறுதியில் உங்கள் வாழ்க்கை அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











