Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
50 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகண நாளில் சனிபகவானால் உருவாகும் அரிய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Chandra Grahan 2025: வேத ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 14 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நாளில் தான் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகை நாளில் சந்திர கிரகணம் நிகழ்வதோடு, இந்நாளில் நீதிமான் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து, சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார்.
இப்படி சந்திர கிரகண நாளில் சனி பகவான் சச ராஜயோகத்தை சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் உருவாக்கியுள்ளார். இப்படியான நிகழ்வின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த நிகழ்வால் அதிர்ஷ்டம் பெறவுள்ளனர்.

அதுவும் திடீர் நிதி ஆதாயங்களுடன், முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் பெறவுள்ளனர். இப்போது சந்திர கிரகண நாளில் சனி பகவானால் உருவாகியுள்ள சச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சந்திர கிரகணத்தன்று சனி பகவானால் உருவாகியுள்ள சச ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தின் போது உருவாகும் சச ராஜயோத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவடையும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தின் போது சனி பகவான் உருவாக்கும் சச ராஜயோகத்தால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தினருடனான உறவு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications