Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
Career Horoscope 2026: இந்த ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். 2027 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்த நான்கு மாதங்களில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இப்படியான கிரக நிலை மாற்றங்களால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும்.

அதில் முக்கியமாக அடுத்த 4 மாதங்களில் குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது. அதே வேளையில் ஆண்டின் இறுதியில் ராகு-கேதுவின் பெயர்ச்சியும் நடக்கவுள்ளது. இப்படியான முக்கிய கிரக மாற்றங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் தொழிலிலும் காணப்படும்.
குறிப்பாக குரு பகவானின் அருளால் சில ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடின உழைப்புக்கான பலனை அடுத்த 4 மாதங்களில் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது 2026 ஆம் ஆண்டின் கடைசி நான்கு மாதங்கள் எந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
2026 ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களானது ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். அதுவும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். தன்னம்பிக்கை இருமடங்கு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கும் அடுத்த 4 மாதங்கள் அற்புதமாக இருக்கும்.
கடகம்
2026 ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்களானது கடக ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலையில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்ய நினைத்தால், இனி வரும் காலம் உகந்ததாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் உள்ளன.
துலாம்
2026 ஆம் ஆண்டின் கடைசி 4 மாதங்கள் துலாம் ராசிக்காரர்களுக்கு அருமையாக இருக்கும். முக்கியமாக நல்ல நிதி ஆதாயங்களும், புதிய தொழில் வாய்ப்புக்களும் கிடைக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தன்னம்பிக்கை உயரும். வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் படிப்படியாக நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். மேலும் உங்கள் கலைத் திறன்களும் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


