Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
2025-ல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பிருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
Career Horoscope 2025: வருகிற 2025 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் மாற்றத்தைக் காணக்கூடும். அதுவும் இந்த ஆண்டில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலனைத் தரக்கூடிய சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார். அதோடு குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களும் தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளன.
இப்படியான கிரக மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் தெரியும். குறிப்பாக ஒவ்வொருவரும் ஒரு புதிய ஆண்டில் நுழையும் போதும் எதிர்பார்ப்பது, இந்த புதிய ஆண்டிலாவது தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படாதா என்பதாகவே இருக்கும். அதுவும் இந்த ஆண்டின் கிரக மாற்றங்களின தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கப் போகிறது.

அதுவும் சில ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது 2025 ஆம் ஆண்டில் தொழில் ரீதியாக எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் குருவின் அருளால் சிறப்பு பாக்கியம் கிடைக்கும். மார்ச் 29 அன்று சனி பெயர்ச்சி நிகழ்வதால், இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களால் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறவுள்ளார்கள். அதுவும், சனி, குரு, ராகுவின் முழு ஆதரவு கிடைப்பதால், விரும்பிய வேலை கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மே மாதத்திற்கு பின் நிகழும் குரு பெயர்ச்சியால், தொழிலில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இதுவரை வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தால், சனி பகவானின் ஆசியால், மார்ச் மாதத்திற்கு பின் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். அதுவும் ராகு கும்ப ராசிக்கு சென்ற பின், பதவி உயர்வு கிடைப்பதோடு, கௌரவம் மேம்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமாக இருக்கும். குருவின் ஆசியால் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நல்ல நிதி நன்மைகளைப் பெறக்கூடும். சனி பெயர்ச்சிக்கு பின், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக பிரமாதமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொழில் ரீதியாக நன்றாக இருக்கப் போகிறது. அதுவும் குருவின் அருளால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதோடு, பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ராகு கும்ப ராசிக்கு சென்ற பின், ராகுவின் ஆசியால் கன்னி ராசிக்காரர்கள் தொழில் நல்ல முன்னேற்றத்துடன், வெற்றியையும் பெறுவார்கள். வருகிற புதிய ஆண்டில் கன்னி ராசிக்காரர்கள் புதிய சாதனை படைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைத் தரும் ஆண்டாக இருக்கும். அதுவும் ஆண்டின் தொடக்கத்தில் சச ராஜயோகம் உருவாகியிருப்பதால், வாழ்க்கை செழிப்பாக இருக்கும். மார்ச் மாத சனி பெயர்ச்சிக்கு பின் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் என்பதால் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் முழுமையாக கிடைக்கும். தொழில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications