Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
2025-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் மகர ராசிக்காரர்கள்.. இனிமேல் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
Capricorn Horoscope 2025 In Tamil: 2025 ஆம் ஆண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவகிரகங்களின் பயணத்தாலும் மகர ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது? பொருளாதார நிலை எப்படி இருக்கும். நல்ல வேலை கிடைக்குமா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள், மகர ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
சனி பகவானின் பயணத்தால் கடந்த ஏழரை ஆண்டு காலமாக படாத பாடு பட்டு வரும் மகர ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கப்போகிறது. குரு பகவானின் பார்வையும் குரு பலனும் உங்களுக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கப்போகிறது. ராகு கேதுவின் பயணமும் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமாகவே உள்ளதால் மிகப்பெரிய மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் சந்திக்கப்போகிறீர்கள்.

கிரகப்பெயர்ச்சிகள்
வரும் மார்ச் மாதம் முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு 3 வது வீடான மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். 6ஆம் வீட்டிற்கு சனிபகவான் மே மாதத்திற்குப் பிறகு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து 2 ஆம் வீட்டிற்கும் கேது உங்கள் ராசிக்கு 8 ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர்.
வேலை தொழில்
சனிபகவானின் இடப்பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய விடுதலையை தரப்போகிறது. ஏழரை சனி காலம் முடிவடையப்போகிறது. இனி தொட்டதெல்லாம் ஜெயமே என்று சொல்லும் அளவிற்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது. பணம் பலவழிகளில் இருந்தும் வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் புரமோசனும் கிடைக்கும்.
பொருளாதார நிலை
சனிபகவான் அருளால் உங்களுக்கு ஆண்டு முழுவதும் பண வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையப்போகிறது. வருமானத்தை பல வழிகளிலும் கொட்டிக் கொடுக்கப் போகிறார். சொத்து சுகங்களை வாரி வழங்கப்போகிறார் சனிபகவான். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதோடு 11 ஆம் வீடு, 9 ஆம் வீடுகளின் மீது குருபகவானின் பார்வை கிடைப்பதால் அற்புதங்கள் நிகழப்போகிறது. ஆன்மீக பயணங்கள் அதிகம் செல்வீர்கள்.
குடும்ப வாழ்க்கை
மே மாதத்தில் குரு இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குருவின் பார்வை பலத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குருவின் அதிசார பெயர்ச்சியால் குருபகவானின் பார்வை நேரடியாக உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண சுபகாரியம் கைகூடி வரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். எத்தனையோ தடைகளை கடந்து வந்திருப்பீர்கள் இனி வெற்றி மீது வெற்றி கிடைக்கப்போகிறது.
பெண்கள்
பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட காலமாக இருந்த உடல் நலப்பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். ராகு யோகத்தை வாரி வழங்க போகிறார். தைரியத்துடன் புது தெம்புடன் எதையும் எதிர்கொள்வீர்கள். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். முன் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
மாணவர்கள்
2025 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போவது மகர ராசிக்கார மாணவர்கள்தான். நினைத்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்க யோகம் வரப்போகிறது. இனி தொட்டதெல்லாம் பொன்னாகப்போகிறது. தேர்வில் தோல்வியை சந்தித்த மாணவர்களுக்கு இனி வெற்றிகள் தேடி வரப்போகிறது. வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு சந்தர்ப்பம் கை கூடி வரப்போகிறது
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
