Latest Updates
-
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்..
1 வருடம் கழித்து உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது...
Budhaditya Rajyog In Libra 2025: ஜோதிடத்தில் பல யோகங்கள் உள்ளன. இந்த யோகங்களானது கிரகங்களின் சேர்க்கையால் உருவாகிறது. அந்த யோகங்களில் மிகவும் மங்களகரமான யோகம் தான் புதாதித்ய ராஜயோகம். இந்த ராஜயோகமானது கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மற்றும் கிரகங்களின் இளவரசனான புதனின் சேர்க்கையால் உருவாகக்கூடியது.
இப்படிப்பட்ட ராஜயோகம் ஒருவருக்கு புகழ், கௌரவம், செல்வம் ஆகியவற்றை கொண்டு வரும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. அதுவும் துலாம் ராசியில் உருவாகப் போகிறது. ஏற்கனவே புதன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி சூரியனும் துலாம் ராசிக்குள் நுழைந்து புதாத்திய ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். சுமார் 1 ஆண்டுகளுக்கு பின் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் துலாம் ராசியில் ராஜயோகமானது உருவாகப் போகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வருமானத்தில் உயர்வு, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன. இப்போது துலாம் ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த ராஜயோகத்தால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தாயாருடனான உறவு சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கினால் நல்ல லாபத்தைப் பெறலாம்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் சூரிய சேர்க்கையால் புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தால் இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு வலுபெறும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications