Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
1 வருடம் கழித்து உருவாகும் சக்திவாய்ந்த பத்ர ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க காட்டுல பண மழை கொட்டப் போகுது...
Badra Rajyog 2025 Will Form In Gemini After 1 Year: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் புதன் குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்.
புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது, அதன் தாக்கம் வாழ்வின் இந்த அம்சங்களில் தெரியும். இப்படிப்பட்ட புதன் சுமார் 1 வருடம் கழித்து தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். புதன் மிதுன ராசியில் நுழைவதால் மிகவும் சக்தி வாய்ந்த பத்ர ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இதன் விளைவாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும், தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது 1 வருடத்திற்கு பின் மிதுன ராசியில் உருவாகும் பத்ர ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். பணியிடத்தில் வேலை செய்யும் திறன் மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திட்டமிடும் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பொருள் வசதிகள் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வார்கள். இந்த பணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். போட்டி தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாகவுள்ளார். இதனால் வேலை தேடிக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலக சூழல் சாதகமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணப் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வந்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஊடகம், கலை, இசை, கற்பித்தல் அல்லது வங்கி தொடர்பான வேலை செய்பவர்கள், புதனின் ஆசியால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
