Latest Updates
-
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா?
2025-ல் இந்த 5 ராசிக்காரங்க பணக்காரர் ஆவாங்களாம்.. கணித்த பாபா வாங்கா.. உங்க ராசி இதுல இருக்கா?
Baba Vanga Predictions 2025: உலகில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறியுள்ள பல்வேறு தீர்க்கத்தரசிகள் உள்ளனர். அதில் மிகவும் பிரபலமானவர் தான் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா 1911 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் 12 வயதில் ஒரு புயலால் தனது பார்வையை இழந்தார்.
இந்த நிகழ்வுக்கு பின், அவருக்கு எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல் கிடைத்ததாக நம்பப்படுகிறது. இந்த ஆற்றல் காரணமாக பாபா வாங்கா எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல்வேறு விஷயங்களை கணித்து அதை குறிப்பாக எழுதி வைத்துள்ளார். இதுவரை பாபா வாங்கா கணித்துள்ள பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த பாபா வாங்கா 1966 ஆம் ஆண்டில் காலமானார்.

பாபா வாங்கா உலகில் நடக்கும் பொதுவான நிகழ்வுகளை மட்டும் தனது குறிப்பில் கணித்து குறிப்பிடவில்லை. 2025 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள் என்பதையும் பாபா வாங்கா தனது குறிப்பில் கணித்து கூறியுள்ளார். இப்போது பாபா வாங்காவின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் பணக்காரர் ஆகப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மேஷம்
பாபா வாங்காவின் கணிப்புப்படி, 2025 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஒரு பெரிய திருப்பு முனையாக இருக்கும். இந்த ஆண்டில் இந்த ராசிக்காரர்கள் ஏராளமான பணத்தை சம்பாதிப்பார்கள் மற்றும் நிறைய செல்வத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும் இந்த ஆண்டில் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், வெற்றிகள் குவியும். வாழ்வில் ஒரு புதிய உச்சத்தை அடைவார்கள். மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்கள் பணக்காரர் ஆவார்கள்.
கும்பம்
பாபா வாங்காவின் கணிப்புகளின் படி, 2025 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய உயரத்தை அடைவார்கள். இந்த ராசியின் அதிபதியான சனியின் வலுவான செல்வாக்கின் காரணமாக, உங்களின் தைரியம் அதிகரிக்கும். இந்த ஆண்டில் சனி பகவான் பலவிதமான சவால்களை சந்திக்க வைத்தாலும், அதை திறம்பட எதிர்கொள்ளும் தைரியத்தையும் அளிப்பார். எந்த ஒரு வேலையையும் தைரியமாக எடுத்து, அதை சிறப்பாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். முக்கியமாக 2025 ஆம் ஆண்டில் அனைத்து கிரகங்களின் நிலைகளாலும் உங்களின் செயல்திறன் மேம்படும்.
ரிஷபம்
பாபா வாங்காவின் கணிப்புப்படி, 2025 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். பல ஆண்டுகளாக செய்து வந்த கடின உழைப்புக்கான பலன் இந்த ஆண்டில் கிடைக்கும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக, 2025 ஆம் ஆண்டில் பணியிடத்தில் உங்களின் நிலை உயரும். உங்களின் ஒவ்வொரு முயற்சிக்குமான பலன் உடனே கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் முன்னேற்றத்திற்கான பல்வேறு வாய்ப்புக்கள் தேடி வரும். மேலும் கடந்த கால கடின உழைப்புக்கான பலன் 2025 ஆம் ஆண்டில் கிடைக்கும். கிரகங்கள் அனைத்தும் சாதகமான நிலையில் இருப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த தொழில் கொடிகட்டி பறக்கவும் செய்யும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
மிதுனம்
பாபா வாங்காவின் கணிப்புப்படி, 2025 ஆம் ஆண்டில் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் காணக்கூடும். பொருளாதார நிலையில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள். கிரகங்களின் நிலைகளால் கையில் பணம் அதிகம் சேரும். உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு நடந்தால், வாழ்க்கை செழிப்பாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications