Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகியுள்ள சுப யோகங்கள்: கிருஷ்ணரின் பரிபூர்ண அருளைப் பெறும் அதிர்ஷ்ட ராசிகள்!
Krishna Jayanthi 2024: ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திரியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியானது ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து வழிபடுவார்கள். இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஏனெனில் இந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று பல ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த அபூர்வ நிகழ்வுகள் நடக்கின்றன. அதாவது துவாபரத்தில் உருவான அதே யோகம் இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் உருவாகிறது. அதாவது இந்நாளில் சந்திரன் ரிஷப ராசியில் குருவுடன் இருந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

அதேப் போல் சர்வார்த்த சித்தி யோகமும் இந்நாளில் உருவாகிறது. இந்த யோகம் மிகவும் சிறப்பான யோகம். இந்த யோக காலத்தில் தொழில் ரீதியாக எந்த புதிய காரியத்தை தொடங்கினாலும், அது வெற்றிகரமாக நடக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் சச ராஜயோகமும் உருவாகியுள்ளது. இப்படி பல சுப யோகங்கள் உருவாகியிருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக இந்த யோகங்களால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. மேலும் கிருஷ்ணரின் பரிபூர்ண அருள் கிடைத்து, வெற்றியும், முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி நாளானது மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இந்நாளில் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடைபெறும். வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். கிருஷ்ணரின் அருளால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கும் கிருஷ்ண ஜெயந்தி நாளானது அற்புதமாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடனான உறவு சிறப்பாக இருக்கும். அனைவரின் மனதையும் அன்பால் வெல்வீர்கள். திருமணம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்நாளில் நல்ல வரன் தேடி வரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் சமூகத்தில் நல்ல மரியாதையைப் பெறுவார்கள். புதிதாக ஏதாவது ஒரு வேலையைத் தொடங்க நினைத்தால், அதை இந்நாளில் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். இந்நாளில் கிருஷ்ணரின் முழு ஆசியும் இருப்பதால், வெற்றிகள் குவியும். திட்டமிட்ட வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடியும். மொத்தத்தில் இந்நாள் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் சிறப்பான அருளைப் பெறுவார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் இருப்பவர்களுக்கு கிருஷ்ணரின் அருளாள் இந்நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். பணப்பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், இந்நாளில் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications