Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
2025-ல் ஜென்ம சனியில் இருந்து விடுபடும் கும்ப ராசிக்காரர்கள்.. அடுத்த 2 1/2 வருஷம் எப்படி இருக்கும் தெரியுமா?
Aquarius Horoscope 2025 In Tamil: 2025 ஆம் ஆண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவகிரகங்களின் பயணத்தாலும் கும்பம் ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது? பொருளாதார நிலை எப்படி இருக்கும். நல்ல வேலை கிடைக்குமா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள், கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
ஏழரை சனியில் ஜென்ம சனி காலத்தில் கும்ப ராசிக்காரர்கள் படாத பாடு பட்டிருப்பீர்கள். 2025 ஆம் ஆண்டில் ஆண்டு கோள்களான சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு ஆண்டு முழுவதும் என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

கிரகப்பெயர்ச்சிகள்
மார்ச் மாத இறுதியில் சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி இரண்டாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். குரு பகவான் மே மாதத்தில் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருந்து 5 ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஆண்டின் இறுதியில் அதிசாரமாக ஆறாம் வீடான கடக ராசிக்கு செல்லப்போகிறார் குரு பகவான். ராகு பகவான் மே மாதத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். கேது பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வந்து அமரப்போகிறார்.
வேலை தொழில்
கடந்த 5 ஆண்டு காலமாகவே கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியால் படாத பாடு பட்டிருப்பீர்கள். ஜென்ம சனி விலகப்போவதால் இழந்ததை மீட்பீர்கள். மே மாதத்தில் குரு பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவது சிறப்பு ராகு, கேதுவும் சாதகமான இடத்தில் பயணம் செய்யப்போவதால் நல்ல காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். குரு பகவான் மே மாதத்திற்கு மேல் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரப்போவது சிறப்பு. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
பொருளாதார நிலை
குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழப்போகிறது. அதோடு உங்கள் ராசிக்கு 9ஆம் வீடு, 11ஆம் வீடுகளின் மீதும் குருவின் பார்வை விழுவதால் விழுவதால் தொட்டதெல்லாம் பொன்னாகும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. நிதி நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவிற்கு வரப்போகிறது. பிசினஸ் முதலீடுகளில் அகலக்கால் வைக்காதீர்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதானம் தேவைப்படும். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களை விட்டு விலகியவர்கள் தேடி வரும் காலம் வரப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவைப்படும்.
குடும்ப வாழ்க்கை
குருவின் பயணம் 2025ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கப்போகிறது. குரு பகவான் அக்டோபர் மாதத்தில் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 6ஆம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது கிடைப்பதால் பண வருமானம் வரும். அதிக கடன் வாங்க வேண்டாம். குரு பகவான் கடனை அதிகரிப்பார். பணத்தை சிக்கனமாக செலவு செய்தால் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம்.
பெண்கள்
பெண்களுக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் பணியிடத்திலும் செல்வாக்கு அதிகரிக்கும். எந்த விசயத்திலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு செய்யாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். மே மாதத்திற்கு மேல் ராகு பகவான் உங்கள் ராசியில் வந்து ஜென்ம ராகுவாக அமரப்போகிறார். ஜென்ம சனி விலகி விட்டதே என்று நிம்மதி பெருமூச்சு விடும் அதே நேரத்தில் ஜென்ம ராகு வந்து அமர்கிறார். சில நேரங்களில் குழப்பங்கள் மன குழப்பங்கள் ஏற்படும். கேது ஏழாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் வீட்டில் வாழ்க்கை துணையுடன் தேவையற்ற விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள்
ஏழரை சனி நடைபெறுவதால் படிப்பில் கவனமும் அக்கறையும் தேவைப்படும். ஒருமுறைக்கு இருமுறை படித்தால் மட்டுமே பாடங்களை புரிந்து கொள்ள முடியும். நட்பு வட்டாரத்தில் கவனம் தேவைப்படும். தேவையற்ற நட்புகளை விலக்குவது நல்லது. மாணவிகள் எதிர்பாலினத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவைப்படும். ஏழரை சனி நீடிப்பதால் சனிக்கிழமை சனி ஹோரையில் நெய்தீபம் ஏற்றி அனுமனையும், சனிபகவானையும் வழிபடுவது நல்லது
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
