ஜாதாகத்தில் உள்ள தோஷம் நீங்கணுமா? 12 ராசியினரும் இந்த விநாயகரை வணங்குங்கள்..!

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும். விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார். விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். விநாயகருக்கு பல பெயர்கள் உண்டு. ஆதி விநாயகர் தொடங்கி வித்யா கணபதி, வீர கணபதி, செல்வ கணபதி பல விநாயர்கள் உள்ளனர்.

அதேபோல வெற்றி விநாயகா, வீர விநாயகா என நாம் பலவாறு புகழ்வதும் உண்டு... விநாயகர் வினைகள் தீர்ப்பவர். சங்கடங்களை போக்குபவர்.. விநாயகரை வணங்கினால் தோஷங்கள் பறந்தோடும். அதிலும் உங்க ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் அவரை வணங்கினாலே போதும் உங்க தோஷங்கள் அனைத்தையும் நீக்குவார்.. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்கள் எந்த விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

all-12-zodiac-signs-worship-this-lord-ganesha-to-get-rid-of-the-dosham-in-the-horoscope

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் வீரமானவர்கள். செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட அவர்கள் மனசுக்கு பட்டதை சரியென்று சொல்வார்கள். மனோதைரியம் மிக்க அவர்கள் வீர கணபதியை வணங்க வெற்றிகள் தேடி வரும். சித்தி விநாயகரை ஒன்பது வாரங்கள் வணங்க காரியங்கள் சித்தியாகும்..

ரிஷபம்

சுக்கிரனை ஆதிக்க நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே... அம்பிகையின் அருளை முழுமையாக பெற்றவர்கள்... சந்திரன் உச்சம் பெறுவது உங்க ராசியில்தான். சங்கடங்கள் தீர சதுர்த்தி நாளில் மஞ்சள் ஆடை அணிந்து சங்கரன் மைந்தனை வணங்கலாம் நன்மைகள் கிடைக்கும். நீங்கள் ஸ்ரீ வித்யா கணபதியை வணங்கலாம்.

மிதுனம்

புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிகாரர்களுக்கு திறமையும் அதிர்ஷ்டமும் வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் போட்டிகளை சமாளிக்க நீங்க லட்சுமி கணபதியை வணங்குங்கள். சகல செல்வமும், லட்சுமி காடாட்சமும் வீடு தேடி வரும்.

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்களுக்கு கற்பனைத்திறன் அதிகம் இருக்கும். நீங்கள் வணங்க வேண்டிய கணபதி ஹேராம்ப கணபதி. இந்த கணபதியை வணங்க கவலைகள் பறந்தோடும் சந்தோஷம் அதிகரிக்கும்.

சிம்மம்

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட இவர்கள் தலைமைப்பண்புடையவர். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். ஸ்ரீவிஜய கணபதியை வணங்க உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒன்பது ஞாயிறுக்கிழமை சூரிய ஓரையில் விநாயகர் ஆலயம் சென்று சிதறுகாய் உடைத்து வழிபடலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் புதனை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள். காரியங்களில் வெற்றியும் புத்திசாலித்தனமும் கொண்ட கன்ன் ராசியினர் மோகன கணபதியை வணங்கலாம். வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் கணபதியை வணங்க கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

துலாம்

சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் லட்சியவாதிகள். வாழ்க்கையில் வெற்றிகள் மேன்மேலும் கிடைக்க திங்கட்கிழமைகளில் கணபதியை வணங்க சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். உங்களுடைய லட்சியத்தில் வெற்றி பெற பஞ்சமுக விநாயகரை வணங்கலாம்.

விருச்சிகம்

செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் உற்சாகமானவர்கள். நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் சக்தி கணபதியை வணங்க எண்ணற்ற சக்திகள் செல்வங்கள் தேடிவரும்.

தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசியினர் நேர்மையானவர்கள். உங்களின் வெற்றி நிரந்தரமாக நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சங்கடஹர கணபதியை வணங்க வேண்டும். ஏழரை சனியில் பாதிப்பில் இருந்து விடுபட தினசரியும் விநாயகரை வழிபடலாம் பாதிப்புகள் குறையும்.

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் உங்கள் ஆசையும் எண்ணமும் நிறைவேற யோக கணபதியை வணங்க வேண்டும். யோக கணபதியை வணங்க வெற்றிகள் தேடி வரும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை நேரில் சென்று வணங்க நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்க புதிய புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். அருகம்புல்லால் விநாயகரை அர்ச்சனை செய்து வர நன்மைகள் நடைபெறும். சித்தி கணபதியை வழிபட சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

மீனம்

குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, நீங்கள் வணங்க வேண்டிய கணபதி பால கணபதி. அரசமரத்தடி விநாயகரை சதுர்த்தி நாளில் வணங்க சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் சங்கடங்கள் தீரும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion