Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களே! நீங்க நல்லவராவே இருந்தாலும்... இந்த காரணத்துக்காக உங்க மனைவி உங்கள விட்டு போயிடுவாங்களாம்!
நேசிப்பதும் காதலிப்பதும் ஒரு அழகான உணர்வு. நாம் அனைவரும் அதை நம் வாழ்வில் ஒரு கட்டத்தில் அனுபவித்திருப்போம் அல்லது அனுபவிக்க விரும்புவோம். உங்கள் மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்கும் நேரங்களும் உள்ளன. ஆனால், அவையெல்லாம் ஒருகடத்தில் முடிவுக்கு வருவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?
உங்களை ஒருவர் மிகத் தீவிரமாக காதலிக்கிறார் அல்லது நீங்கள் ஒருவரை மிகத் தீவிரமாக காதலிக்கிறீர்கள். அப்போது, உறவின் தொடக்கத்தில் மோகத்தின் ஆரம்பச் சுடர் நன்றாக இருக்கும். உங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி கொடுக்கும். ஆனால், காலப்போக்கில் அவையெல்லாம் குறையத் தொடங்கலாம். அந்த உறவு முடிவுக்கு வரலாம்.

நிலையான அன்பு மற்றும் நம்பிக்கை நிறைந்த உறவு மட்டுமே வாழ்வின் இறுதி வரை ஒன்றாக நீடிக்கும். மற்ற உறவுகள் மிகவும் சிக்கல் நிறைந்ததாகவும் கடினமாகவும் மாறலாம். மக்கள் சரியான நபருடன் உறவில் இருந்தாலும் கூட, காதலில் இருந்து விலக சில காரணங்கள் இருக்கலாம்.
உறவில் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் ஆர்வத்தை இழக்க பல காரணங்கள் உள்ளன. பெண்கள் காதலில் இருந்து விலகி, தங்கள் கணவனை அல்லது காதலனை விட்டு வெளியேறுவதற்கான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
தொடர்பு சிக்கல்கள்
ஓர் ஆரோக்கியமான உறவுக்கு தொடர்பு கொள்ளுதல் மிக முக்கியம். தம்பதிகளுக்கு இடையே தகவல் தொடர்பு சரியாக இல்லையென்றால், அதுவே உறவு முறிவதற்கு முதன்மைக் காரணமாக அமையலாம். ஆரோக்கியமான தகவல்தொடர்பு இல்லாமை உறவுகளுக்கு பேரழிவை ஏற்படுத்தும். ஏனெனில், தொடர்பு இல்லாமல், தம்பதிகள் இருவரின் தேவைகள் மற்றும் கவலைகள் கவனிக்கப்படுவதில்லை.
சரியான தகவல் தொடர்பு உறவுகளை வளர்ப்பது மட்டுமல்லாமல், ஒருவரையொருவர் நெருக்கமாகவும் இணக்கமாகவும் உணர உதவும். உங்கள் உறவில் உணர்ச்சிகரமான மற்றும் உணர்வுப்பூர்வமான உரையாடல் இல்லையென்றால், அந்த உறவு விரைவில் முறிவுக்கு வரும் என்பதை குறிக்கலாம். உங்கள் மனைவி அல்லது காதலியிடம் இந்த அறிகுறிகள் தெரிந்தால், உங்களைவிட்டு பிரிந்து செல்ல அல்லது உறவை முறித்துக் கொள்ள முயலலாம்.
உடல் அல்லது உணர்ச்சி நெருக்கம் குறைகிறது
தம்பதிகளுக்கு இடையில் உணர்ச்சி மற்றும் உடல் நெருக்கம் மிகவும் முக்கியமானது. கைகளைப் பிடிப்பது, நெற்றியில் முத்தமிடுவது, சிறிய கைதீண்டல் மற்றும் உடல் நெருக்கம் போன்றவை அனைத்தும் குறைவது, உங்கள் உறவில் நெருக்கம் குறைவதை குறிக்கிறது. இந்நிலையில், இரு கூட்டாளிகளும் ஒருவரையொருவர் பாதிக்கக்கூடியவர்களாக உணர்ந்து, எல்லா வகையிலும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது அவசியம்.
எனவே, உறவில் நெருக்கம் இல்லாதிருந்தால், உங்கள் மனைவி உங்கள் மீது வைத்த காதல் முடிவுக்கு வருகிறது என்று அர்த்தம் அல்லது உங்கள் மனைவி உங்களால் ஈர்க்கப்படவில்லை என்று நினைக்கலாம். இது அவர்களின் சுயமரியாதையையும் பாதிக்கிறது.
தனிப்பட்ட இடத்தை வழங்காமல் இருப்பது
ஒவ்வொருவருக்கும் உறவில் தனிப்பட்ட இடம் தேவைப்படுகிறது. ஏனெனில் இது கூட்டாளர்களை தனித்தனியாக வளரவும், அவர்களின் சொந்த இடத்தில் இருக்கவும், அவர்களின் எண்ணங்களைத் துடைக்கவும், முன்னுரிமைப் பட்டியலில் தங்களைத் தாங்களே தக்கவைத்துக் கொள்வதை உணரவும் உதவுகிறது.
இருப்பினும், உறவில் தனிப்பட்ட இடம் இல்லாதிருந்தால், அது ஒரு கூட்டாளரை மூச்சுத் திணறச் செய்யலாம். உங்கள் மனைவியின் தனிப்பட்ட இடம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவுக்கு அதிகமாக நீங்கள் குறுக்கிடலாம். இது ஒரு உறவிலிருந்து மகிழ்ச்சியையும் அன்பையும் எளிதில் வெளியேற்றி, அதை எரிச்சலூட்டும் ஒன்றாக மாற்றும். அதனால், உங்கள் மனைவி உங்களை விட்டு விலக நினைக்கலாம்.
நம்பிக்கை மற்றும் மரியாதை இல்லாதது
ஒரு உறவில், சில முக்கியமான பகுதிகள் உள்ளன. அதை ஒருவர் சமரசம் செய்து கொள்ளவே முடியாது. ஒரு உறவில் நம்பிக்கை மற்றும் சுய மரியாதையை இழப்பதை யாராலும் பொருத்துக்கொள்ள முடியாது. உங்கள் பங்குதாரர் நம்பகமானவரா? நேர்மையானவரா? அல்லது நேர்மையற்றவரா? என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
சிறிய விஷயங்கள் ஒரு உறவில் பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்துகின்றன. எனவே, ஒரு பங்குதாரர் எல்லைகளை புரிந்து கொள்ளாமல், மீண்டும் மீண்டும் எல்லைகளை தாண்டி வருவது நல்லதல்ல. இதுபோன்ற உறவிலிருந்து பெண்கள் விலகிச் செல்ல முனைகிறார்கள்
நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அமைத்தல்
ஒரு உறவில் இரண்டு வெவ்வேறு வகையான நபர்கள் இருக்கிறார்கள். தம்பதிகள் அதை மதிக்க வேண்டும். உங்கள் துணையிடம் இருந்து நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அமைத்து, அவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறுவது உறவில் பிரச்சனைகளை உருவாக்கலாம். ஒவ்வொருவரும் வெவ்வேறு மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளை கொண்டிருக்கலாம், அவை மதிக்கப்பட வேண்டும்.
மேலும், கடினமான சூழ்நிலைகளில், உங்கள் பங்குதாரர் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அது அவர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கும். இது அவர்களை உறவுக்குள் சிக்கி இருப்பதாக உணர வைக்கும். பெண்கள் தங்கள் கூட்டாளிகளிடமிருந்து விலகிச் செல்வதற்கு இது மற்றொரு காரணமாக இருக்கலாம்.
மோசமான சுய பிம்பத்தை உருவாக்குதல்
உங்கள் துணையை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பது, உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் மனதில் ஒரு மோசமான சுய-பிம்பத்தை உருவாக்குவது உங்கள் மதிப்பைக் குறைக்கும். இது நீங்கள் ஒரு நல்ல உறவுக்கு தகுதியற்றவராகவும் உணர வைக்கும்.
இது ஒரு உறவில் உங்கள் துணையிடம் உங்கள் தகுதியை கேள்விக்குள்ளாக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில், இது பல பாதுகாப்பின்மை பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனை தொடர்ந்து, உங்களுடன் வாழ பிடிக்கமால் அல்லது அந்த தகுதியை நீங்கள் இழக்கும்போது, உங்கள் மனைவி உங்களை பிரிந்து செல்லலாம்.



Click it and Unblock the Notifications

